`வாக்குகளைக் கவருவதற்காக எதிர்க்கட்சிகள் இலவசங்களை வாரி வழங்குகின்றன’ என்று பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்களுக்கு எதிராகப் பேசிவருகிறார். மேலும், ‘இலவசங்கள் நம் குழந்தைகளின் உரிமையைப் பறித்து நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும். சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்’ என்கிறார் பிரதமர் மோடி.மோடி
‘இலவசங்களை வழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்... இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்’ என்பதும் பிரதமர் மோடியின் கருத்து. இலவசங்களுக்கு எதிராக மோடி பேசத் தொடங்கிய பிறகு, ‘குறுகிய கால இலவசங்கள்’ தொடர்பான அறிவிப்புகளைத் தேர்தல் அறிக்கைகளில் தவிர்க்குமாறு தனது மாநில அமைப்புகளை பா.ஜ.க அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
இலவசங்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் கருத்துக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்தார். ‘நாங்கள் இலவசங்களை விநியோகிக்கவில்லை, கல்வி, மருத்துவம் போன்ற மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிறோம். அவை, இலவசங்கள் அல்ல’ என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.அமித் ஷா
இலவசங்களுக்கு எதிராக பிரதமர் பேசிவந்த நிலையில், பா.ஜ.க-வின் கோட்டையாக விளங்கும் குஜராத் மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தலின்போது இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை பா.ஜ.க வழங்கியது. அதாவது, முதிய பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர், பொருளாதாரத்தில் பின்தங்கிய கர்ப்பிணி பெண்களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்து திட்டம், ஒவ்வோர் ஆண்டும் இலவசமாக இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என பல வாக்குறுதிகளை பா.ஜ.க அறிவித்தது. இதன் மூலம் இலவசங்களுக்கு எதிரான கருத்திலிருந்து பா.ஜ.க பல்டி அடித்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
அடுத்ததாக, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான ‘இலவச’ வாக்குறுதிகளை பா.ஜ.க அள்ளிவீசியது. ‘கர்நாடகாவில் ஏழைகளுக்கு தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும். ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி நாள்களில் ஏழைகளுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்’ என்பது போன்ற பல வாக்குறுதிகளை பா.ஜ.க வழங்கியது. மோடி
தற்போது, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பரபரப்படைந்துவரும் நிலையில், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அதில், சத்தீஸ்கரில் பா.ஜ.க-வின் ஆட்சி அமைத்தால், திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பெண்களுக்கு ரூ.1,000 மகளிர் உதவித்தொகை வழங்குவதைப்போன்ற திட்டத்தை பா.ஜ.க சத்தீஸ்கரில் அறிவித்திருக்கிறது. இதனால், திமுக ஆட்சியின் திட்டத்தை பா.ஜ.க காப்பியடிக்கிறது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.‘தாஜ்மஹாலைக் கட்டியது யார்?’ - வழக்கின் வழியே சர்ச்சையைக் கிளப்பும் ‘இந்து சேனா’
இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., இலவச வாக்குறுதிகளை வழங்குவதன் ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி போன்றவர்கள் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை பா.ஜ.க அரசு வாரி வழங்குகிறது’ என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.கர்நாடகாவில் மோடி
அதே நேரத்தில், ‘பெரும் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் அந்த இலவசங்களை பா.ஜ.க எதிர்ப்பதில்லை. கடந்த ஒன்பதாண்டு கால பா.ஜ.க ஆட்சியில், வரிச்சலுகை, கடன் தள்ளுபடி என ரூ.25 லட்சம் கோடியை பா.ஜ.க அரசு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஏழைகளுக்கு கொடுத்தால் மட்டும் இலவசம் என்கிறார்கள்... பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசினாலும் தேர்தல் நேரத்தில் பாஜக, இலவசங்கள் என்ற ஆயுதத்தை தவறாமல் எடுத்து விடுகிறது. எதிர்க்கட்சிகளின் இலவசங்களை கடிந்து கொள்ளும் மோடி, சொந்த கட்சியின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்பை மட்டும் எதுவும் சொல்லாமல் கடந்து செல்கிறார்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SyRnsl
Monday, 6 November 2023
Home »
» பிரதமர் மோடி எதிர்க்கும் இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக... ஏன் இந்த விநோதம்?!