மதுரை மத்திய சிறை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட ரெடிமேட் ஆடைகள், இனிப்பு, கார வகைகளின் சிறப்பு விற்பனை களை கட்டியுள்ளது.ரெடிமேட் ஆடைகள
ஒருவித இறுக்கம் நிறைந்ததாகவும், நிராகரிக்கப்பட்ட பகுதியாகவும் பார்க்கப்படும் சிறைச்சாலைகளின் அடையாளம், சமீபகாலமாக மாற்றப்பட்டு வருகிறது.
சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினர், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நலன் சார்ந்து சிறைத்துறை எடுத்துவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் தமிழகத்திலுள்ள சிறைச்சாலைகள் கல்விச்சாலைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன.சிறைச் சந்தை`கலைநாயகி’ விருது பெற்ற முத்துக்கண்ணம்மாள்... நடிகை ரோகிணி நெகிழ்ச்சி!
அந்த வகையில் 1600 -க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ள மதுரை மத்திய சிறைச்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்திலும், கைத்தொழில்களிலும் சிறைவாசிகள் ஈடுபட்டு வந்தனர். மேலும், சிறை அங்காடி திறக்கப்பட்டு அதில் அவர்கள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள், விளைவித்த காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
பின்பு சிறை வளாகத்திலேயே டீக்கடை, பலகாரக் கடை, அதன் நீட்சியாக சிறை அங்காடி, இப்போது சிறைச் சந்தை என வளர்ந்து வந்துள்ளது. பெட்ரோல் பங்கும் நடத்தப்படுகிறது. இங்குள்ள ஹோட்டலில் சுவையான உணவுகள் கிடைப்பதால் மக்கள் விரும்பி வரத் தொடங்கியுள்ளார்கள்.சிறைச் சந்தை
தற்போது இந்த வளாகத்தில்தான் தீபாவளிக்கான சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சிறைவாசிகள் தயாரித்த ரூ.300 - 550 விலையில் ரெடிமேட் ஆடைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளன. கூடவே சிறையில் நெய்யப்பட்ட போர்வைகள், துண்டுகள், கைலிகள், மதுரையில் பெயர் பெற்ற சுங்குடி சேலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதோடு சுத்தமாகவும் சுவையாகவும் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் கிலோ ரூ.300 - 500 வரையிலும், கார வகைகள் ரூ.240க்கும், ரூ.499-க்கு இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய காம்போ பேக்குகளும் கிடைக்கின்றன.சிறைச் சந்தை
இந்த அங்காடியில் சிறையில் தயார் செய்யப்பட்ட செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்யும் விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் முன்னிலையில் தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த சிறைத்துறை டிஐஜி பழனி பேசும்போது, "தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறைவாசிகள் சீர்திருத்தப் பணியில் தமிழ்நாடு அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சிறைத்துறை டிஐஜி பழனிஆன்லைன் வகுப்பு; பள்ளி விடுமுறை; வொர்க் ஃப்ரம் ஹோம்... டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் வருமா?
ஒரு தவறு செய்து சிறைக்கு சென்று வந்த பின், தாங்கள் செய்த தவற்றை உணர்ந்து மீண்டும் தவறு புரியாவண்ணம் அவர்களுக்கு நல்லொழுக்கங்களும், அவர்களது வாழ்வாதாரத்திற்குத் தேவையான தொழில் பயிற்சிகளும், கல்வி அறிவும் பெற பல்வேறு வகையான திட்டங்களை சிறைத் துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி செயல்படுத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறைவாசிகளின் குடும்பத்தாரும், சிறைவாசியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரும் பயன்பெறும் வகையில் இந்த தீபாவளியில் பொதுமக்கள் அதிகம் வாங்கும் பொருள்களான ஆடைகள், இனிப்பு, கார வகைகள் விற்பனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறைவாசிகளின் தயாரிப்புப் பொருள்களை அதிகளவு வாங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளார்
இந்த தீபாவளி பண்டிகையில் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சிறைவாசிகள் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றும் வகையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்களுடன் சமுதாயத்தில் சிறைவாசிகள் இணைவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தீபாவளி சிறப்பு விற்பனை அமையும். இது ஒரு சீர்திருத்த தீபாவளியாக அமையும் வகையில் பொதுமக்கள் தங்களது ஆதரவைத் தர வேண்டும்" என்றார்.சிறை சந்தைகீழே மீன், மேலே காபி... நீந்தும் மீன்களோடு வடிவமைக்கப்பட்ட கஃபே, எங்கு தெரியுமா?
தொழிலதிபர் செல்வராஜ் தன் நிறுவன ஊழியர்களுக்கு வழங்க 100 கிலோ சிறப்பு இனிப்பு பெட்டகத்திற்கு ஆர்டர் கொடுத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க பிரசிடென்ட் சிவசங்கர் தன் ஊழியர்களுக்காக ஆர்டர் கொடுத்து சிறை சந்தையின் தீபாவளி விற்பனையை அமோகமாக ஆரம்பித்து வைத்ததார்.
மதுரை சிறை சந்தையின் தீபாவளி விற்பனை தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே தமிழக அரசின் மஞ்சள் பை விற்பனைத் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
http://dlvr.it/SyYnlT
Wednesday, 8 November 2023
Home »
» மதுரை: சுங்குடி சேலை, இனிப்பு - காரம், செக்கு எண்ணெய்.. சிறைவாசிகளின் தீபாவளி சந்தை!