ஒவ்வோர் ஆண்டும் பிரதமர் மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் தங்கள் சொத்துகள் மற்றும் கடன்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்களை தானாக முன்வந்து அறிவிப்பார்கள்.
இந்த நிலையில் மோடியின் வலது கையாகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி வரும் அமித் ஷா, தனது சொத்து மதிப்புகள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, ``2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அமித் ஷாவின் சொத்து விவர அறிவிப்பின் படி, அமித் ஷாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு 30.48 கோடி ரூபாய். அமித் ஷா``உலக அளவில் ஸ்டார்ட் அப்களுக்கு இந்தியா 3-வது உகந்த இடம்!" - அமித்ஷா ட்வீட்
அவரின் மனைவி சோனல் பெனின் சொத்து மதிப்பு ரூ.8.33 கோடியாக இருந்தது. இந்தச் செல்வமானது ரியல் எஸ்டேட், முதலீடுகள் மற்றும் விலைமதிப்பற்ற நகைகள் உட்பட பலதரப்பட்ட சொத்துகளை உள்ளடக்கி இருந்தது.
இந்த நிலையில் 2023-ல் வெளியிடப்பட்டுள்ள அவரின் சொத்துகள் படுவேகமாக அதிகரித்துள்ளது. இந்த சொத்து மதிப்புகள் எங்கிருந்து எப்படி எவ்வளவு வேகத்தில் கிட்டியது என்பதெல்லாம் ஆச்சர்யம்தான்!
அசையா சொத்துகள்… அமித் ஷாவின் மொத்த அசையா சொத்துகளின் மதிப்பு 13,56,08,593 ரூபாய். இதில் 6 அசையா சொத்துகள் அமித் ஷாவின் பெயரில் இருக்கின்றன. இதைத்தாண்டி அவரின் தாய் எழுதி வைத்த உயிலின் படி 4 சொத்துகள் உள்ளன.
அமித் ஷாவின் அசையா சொத்துகளின் பட்டியல் முறையே…
* குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள வட்நகரில் 10.477 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம்.
* குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள லிலாபூரில் 1.408 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம்.
* குஜராத்தின் காந்திநகரில் 3,511.43 சதுர அடியில் உள்ள குடியிருப்பு நிலம்.
* குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சோலாவில் 2,690 சதுர அடியில் அலுவலக இடம்.
* குஜராத் அகமதாபாத்தில் தால்தேஜில் உள்ள ராய்யாய் கிரெசென்ட்டின் 3,848.13 சதுர அடியில் 50 சதவிகித உரிமை.
* குஜராத் அகமதாபாத்தின் சோலாவில் 1,355 சதுர அடி பரப்பளவில் உள்ள கடை எண்.5-ல் 50 சதவிகித உரிமை.
* தாயிடமிருந்து பரம்பரை சொத்தாகப் பெற்ற குஜராத் ஷிலாஜ், தஸ்க்ரோயில் 59,890.89 சதுர அடி.
* சுதீப் சொசைட்டியில் 50 சதவிகித உரிமை. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள கோச்ராப்பில் 4,625 சதுர அடி அலுவலக இடம். அமித் ஷா - சோனல் ஷா!பிரதமர் மோடியின் பேங்க் அக்கவுன்டில் எவ்வளவு பணம் உள்ளது? சொத்து விவரங்கள் இதோ..!
இதைத்தாண்டி நிகர சொத்துகளின் மதிப்பு 13,40,31,556 ரூபாய். வங்கியில் வாங்கியுள்ள கடன் 15,77,037 ரூபாய். அமித் ஷாவின் வங்கிக் கணக்கில் 1.09 கோடி ரூபாய் வைத்துள்ளார். நகையாக 50.91 லட்சம் வைத்துள்ளார்.
இதைத்தாண்டி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளாக 3.08 கோடி ரூபாய், பட்டியலிடப்பட்ட பங்குகளாக 27.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்து இருக்கிறார். அதோடு 19.75 லட்சத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசியும் உள்ளது.
இதைத் தவிர்த்து அமித் ஷாவின் மனைவி சோனல்பெனின் கையில் பணமாக 20,633 ரூபாயும், பேங்க் பேலன்ஸில் 7,85,00,000 ரூபாயும், பிக்ஸ்டு டெபாசிட்டில் 6,00,00,000 ரூபாயும் உள்ளன.
நகையாக 1,55,40,075 ரூபாயும் உள்ளது. இவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு 42,98,62,537 ரூபாய். இதுவரை இன்ஷூரன்ஸ் பாலிசியில் செலுத்தி இருக்கும் தொகை 68,83,500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென அரசியல்வாதிகளின் சொத்து மதிப்புகள் அதிகரிப்பது குறித்து உங்களின் கருத்தென்ன..? கமென்டில் சொல்லுங்கள்!
http://dlvr.it/SyvsKw
Thursday, 16 November 2023
Home »
» அமித் ஷாவின் மொத்த சொத்து எவ்வளவு..? ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, பேங்க் பேலன்ஸ் விவரங்கள்..!