`சந்தன மாநகரம்’ என்று அழைக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பேருந்து நிலைய திட்டம், 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பேருந்து நிறுத்துமிடம் மேடு பள்ளங்களாகவும், மது பாட்டில்களாலும் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் பேருந்து வெளியே செல்லும் இடங்களில் தூய்மையற்ற கழிப்பிடங்கள், அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்து வெளியே செல்லும் இடத்தில், நகராட்சி நவீன கட்டணக் கழிப்பிடமும், பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பிடமும் இருக்கின்றன. நீண்ட வருடங்களாகவே இந்தச் சிறுநீர் கழிப்பிடத்திலிருந்தும், நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீர் கலந்து கால்வாயில் தேங்கிய நிலையில் காணப்படுவதாகவும், அதுவும் திறந்தநிலையிலே கிடப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், மது அருந்திவிட்டு மது பாட்டில்களைப் பேருந்து நிலையத்தின் ஓரங்களில் போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்தின் மையப் பகுதிகளில் மேடும், பள்ளமாகவும் காணப்படுவதால், மக்கள் அந்த வழியாக அவசரமாகப் பேருந்தைப் பிடிக்கச் செல்லும்போது கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், பேருந்து நிறுத்துவதில் சிரமமாக இருக்கிறது என்றும் பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர் .
அதுமட்டுமல்லாமல், மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களைப் பேருந்து நிலையத்தின் ஓரங்களில் போட்டுவிடுவதாகவும் கூறினர். அதேசமயத்தில் அந்த இடத்தில் பொதுமக்கள் சிலர் குப்பைகளையும் சேர்த்துப்போடுவதால் நீர் தேங்கி நோய் பரவுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் சில ஓட்டுநர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தும் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து மற்றும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் சிறுநீர் கழிப்பிடம் சரிவரப் பராமரிக்காததால், மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பொதுமக்கள் பேருந்து நிலையத்தின் சிறுநீர்க் கழிப்பிடத்தைப் பயன்படுத்தாமல் அதற்கு எதிரே அமைந்துள்ள நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த இரண்டு கழிப்பிடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்து வெளியே செல்லும் இடத்திலுள்ள கால்வாயில் துர்நாற்றத்துடனும், கொசு முட்டைகளுடன் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி வி.சி.எம் என்ற தெரு ஒன்று இருக்கிறது. இந்தத் தெருவைச் சார்ந்த மக்கள் இது குறித்து பலமுறை உரிய அதிகாரிகளிடமும், வார்டு கவுன்சிலரிடமும் எடுத்துரைத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர் .
கால்வாய்க்கு அருகிலுள்ள கடை விற்பனையாளர்களும் எப்போதும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே இருப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, "இந்த வழியாக நீங்கள் மூக்கை மூடாமல் சென்றால் நான் உங்களுக்குக் காசு கொடுக்கிறேன்" என்று நிலைமையை விவரித்தனர்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயகக் கடமையாற்றிய பொதுமக்கள் கேட்கிறார்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SyyNrH
Friday, 17 November 2023
Home »
» சீர்கெட்டுக் கிடக்கும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்; கேள்விக்குறியான சுகாதாரம் - மக்கள் வேதனை!