சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இதற்கு தலைமை வகித்தார். 50-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 'வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கும் பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும். அவர்களுக்கான பயிற்சிக்கூட்டங்களை வரும் ஜனவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். INDIA கூட்டணியை மேலும் வலிமையாக்கி, செழுமையாக்குவது ஒவ்வொரு மாவட்ட தலைவர்களின் கடமை. நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காலேல்கர், சமூகநீதிக்கான அரசியலமைப்பு சட்ட முதல் திருத்தத்துக்கான அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுத்தபோது, இதில் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி, அந்த அறிக்கையை குப்பை கூடையில் தூக்கி எறியுங்கள் என்று நேரு கூறியதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட அவரது கருத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல், விவசாயிகள் விரோதப் போக்கு, பிரதமரின் அதிகார குவியல், கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிப்பது, அதானி, அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் சொத்துக் குவிப்புக்கு துணைபோவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவிப்பது உள்ளிட்டவை குறித்து ஆதாரத்துடன் பட்டியலிட்டு, குற்றப்பத்திரிகை தயாரித்து டிசம்பரில் வெளியிடப்படும். இதைக் கொண்டு கிராமந்தோறும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள் பலர், 'தி.மு.க கூட்டணியில் 15 சீட்டுக்களை பெற வேண்டும்' என வலியுறுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், '"தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்” என முன்னாள் மாநில தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கொதித்திருக்கிறார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, “காவிரி பிரச்னையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் விருப்பம் போல், ஏதேதோ செய்கிறார். கடந்த 4 நாட்களில் அவரிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்.ஈவிகேஎஸ்
அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள் போல. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் மீது தான் திருவண்ணாமலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டுள்ளது. அதில் சில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும், முதல்வர் அவற்றை நீக்கியுள்ளார். ஐந்து மாநில தேர்தலில், பஞ்ச பாண்டவர்கள் போல் நாங்கள் வெற்றி பெறுவோம்” என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன், "கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்த பொழுது 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்டு பெறுவதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முனைப்பு காட்டி வந்தது. அந்த நேரத்தில் திடீரென ப.சிதம்பரம் ஊடகத்தில் தோன்றி, 'குறைவான தொகுதிகள் பெற்று நிறைவான வெற்றியை பெறுவோம்' என கூறினார். ஆகையால் கூடுதலாக கிடைக்க வேண்டிய தொகுதிகள் தமிழக காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. 25 இடங்கள் தான் காங்கிரஸுக்கு கிடைத்தது. இதற்கிடையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளை பெறவேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், 'தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகிறார். காங்கிரஸ் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருப்பதே நம்மவர்கள் என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது" என்றார். ஜி.கே.முரளிதரன்
இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரியின் ஆதரவாளர்கள், "தலைவர் முறைப்படி அனைவரையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பது வழக்கம். ஆனால் அவர்கள் தான் வருவதில்லை. சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனுக்கு உதயநிதி வந்தபொழுது அனைவரும் வந்துவிட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மகன்களுக்கு சீட் பெறுவதற்கும் யாரும் அழைக்கமாலே முன்னாள் தலைவர்கள் வருவார்கள். கட்சி மீது அக்கறை இருந்திருந்தால் அவரே வந்திருக்கலாம். இது தேவையற்ற சர்ச்சை" என்றனர்.
"அழகிரியை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸில் சில இடங்களில் நீண்ட காலமாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. அங்கெல்லாம் புதிய தலைவர்களை அழகிரியால் நியமிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு தெரியாமலேயே புதிய மாவட்ட தலைவர்களை டெல்லியில் பேசி நியமித்துவிடுகிறார்கள். எனவே அழகிரி இதுபோல் கூட்டம் நடத்துவதெல்லாம் நானும் ரெளடி தான் என்ற தொனியிலேயே இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அகில இந்திய தலைமை புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் அழகிரியாவது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள் சிலர் கொதித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தண்டவாளத்தை நோக்கி இழுத்த தொண்டர்கள்... ‘ஜென்’ மோடுக்குப்போன கே.எஸ்.அழகிரி...
http://dlvr.it/Sz6rWv
Tuesday, 21 November 2023
Home »
» `மர்மமாக கூட்டம் நடத்துகிறார்’... கே.எஸ்.அழகிரியுடன் மோதும் ஈவிகேஎஸ் - அரசியல் பின்னணி என்ன?!