தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகத் திகழ்வதால், பல்வேறு அரசியல் கட்சிகள் இதில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. மறுபுறம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க தலைமையில் NDA- கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் INDIA - கூட்டணியும் தங்கள் கூட்டணிக் கட்சிகளைப் பலப்படுத்திவருகின்றன.மோடி, ராகுல் காந்தி
மேலும், பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள்மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை தீவிரமான சோதனையில் இறங்கியிருக்கின்றன. குறிப்பாக, இந்தியா கூட்டணியில் பலமாக இருக்கும் கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி என அதன் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுவரும் நிலையில், தேர்தலை முன்னிட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதற்கிடையில், INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விகளும் எழுந்திருக்கின்றன. அதற்கு முன்னர் காங்கிரஸ் தலைமை, "இந்தத் தேர்தலில் எங்களுக்குப் பதவிகூட வேண்டாம். இந்தியாவை பாசிச அரசிடமிருந்து காப்பாற்றினால் போதும்" என்ற நிலைப்பாட்டை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியக் கூட்டணியிலிருந்து யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்யலாம். இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பது கூட்டணியைச் சிதைத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அனைவரும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்ய, பிரதமர் வேட்பாளர் முடிவைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.மல்லிகார்ஜுன கார்கே
பா.ஜ.க-வை எதிர்த்து போராடுவதற்குக் கூட்டணிவைத்து, ஓரணியாக இணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இப்போது உணர்ந்திருக்கிறோம். கேரளாவில் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சிகளும் பரம எதிரிகளாக இருந்தாலும், தேசிய அளவில் இடதுசாரிக் கட்சிகள் செய்வதுபோலவே கூட்டணியில் இணைந்து போராடுவதை ஆம் ஆத்மி பரிசீலிக்கலாம். பொதுத்தேர்தலில் முடிந்தவரை ஒற்றுமையாகப் போராட, அனைத்துக் கட்சிகளுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, காங்கிரஸ் விரும்புகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 132 பேர் பலி - `உதவ தயார்’ என பிரதமர் மோடி பதிவு!
http://dlvr.it/SyPZPY
Sunday, 5 November 2023
Home »
» `இப்போது பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது, INDIA கூட்டணியைச் சிதைத்துவிடும்’- மல்லிகார்ஜுன கார்கே