தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், மாநில முதலமைச்சருமான ஸ்டாலின் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பல்கலைக்கழகத் துணைவேந்தர் சௌமியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் விழாவில் பங்கேற்றனர்.முதல்வர் ஸ்டாலின்
பல்கலைக்கழகம் சார்பில் பாடகி பி.சுசீலா, இசைக்கலைஞர் முனைவர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதிலும், பாடல் பாடுவதிலும் வல்லவர். அதேபோல் என்னுடைய தந்தை கலைஞர், எல்லா இசை நுணுக்கங்களையும் அறிந்தவர். நிறைய பாடல்களை, கவிதைகளை எழுதியிருக்கிறார்.
இசையைக் கேட்டதும் அதில் சரி - தவறுகளை விளக்கமாகக் கூறுவார். `விண்ணோடும் முகிலோடும் விளையாடும்' பாடலைப் பாடியவர், என்னுடைய மாமா சி.எஸ் ஜெயராமன். அந்த வகையில் இசைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்ற பெருமை, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துகுத்தான் உண்டு. ஜெயலலிதா
இது முழுக்க மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக்கழகம். மாநில அரசின் முதல்வரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகமும் இதுதான். நான் அரசியல் பேசவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளரும். மற்றவர்களின் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதையும். அதனால்தான், 2013-ம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழக வேந்தராக, முதல்வரே இருக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவுசெய்திருக்கிறார்.
இன்றைக்கு இருக்கும் நிலையை உணர்ந்து, அம்மையார் ஜெயலலிதாவை மனமாரப் பாராட்டுகிறேன். இரு இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தால் பட்டமும் பெருமையடைகிறது. பி.சுசீலாவின் பாடலை நான் எப்போதும் விரும்பிக் கேட்பேன். நான் பயணிக்கும்போது அவருடைய, `நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை… உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை… காயும் நிலா வானில் வந்தால், கண் உறங்கவில்லை…' (கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி இயக்கி, 1962-ம் ஆண்டு வெளியான `தெய்வத்தின் தெய்வம்' என்ற திரைப்படத்தில் பி.சுசீலா பாடிய பாடல்) என்ற பாடலை அடிக்கடி கேட்பேன்.பி.சுசீலா
இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் முதல்வர் ஸ்டாலின்..! pic.twitter.com/s6b1opaWap— @JuniorVikatan (@JuniorVikatan) November 21, 2023
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தராகச் செயல்பட்டால்தான், மாணவர்களுக்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும். அதனால்தான் இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரித்துவருகிறது. நல்ல சேதி வரும். ஒத்திசைவு பட்டியலிலுள்ள கல்வி, மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும்.
அப்போதுதான் எல்லோருக்கும் கல்வி, உயர்கல்வி என்ற இலக்கை அடைய முடியும். இதை எல்லா மாநிலங்களுக்குமானதாகவே சொல்கிறேன். நமது உண்மையான சொத்து, கல்விதான். அதை எல்லோருக்கும் வழங்குவதுதான் திராவிட மாடல். இந்தப் பல்கலைக்கழகம் மூலம் பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த வகையில், இது சமூக நீதிக்கான பல்கலைக்கழகம். மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய `நீராரும் கடலுடுத்த' பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பாட, 1970-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தவர் கலைஞர். முதல்வர் ஸ்டாலின்
கலை, இலக்கியம் என்பது பழைய பெருமை அல்ல... எதிர்காலத் தேவை. தமிழ் இசைக்கும், தமிழ்ப் பாடலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பழந்தமிழ் இசை நூல்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஊக்கம் தர வேண்டும். ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஆராய்ச்சி நூலகம் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.மணிப்பூர்: ``2 நாள்களில் 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத போதைப் பயிர்கள் அழிப்பு''- முதல்வர் பிரேன் சிங்
http://dlvr.it/Sz6rBj
Tuesday, 21 November 2023
Home »
» MK Stalin: `உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை!' - பட்டமளிப்பு விழாவில் பாடிய முதல்வர் ஸ்டாலின்