பொதுவாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின்போது நீதிபதிகளை வழக்கறிஞர்கள் `மை லார்ட் (My Lord)' என்று அழைப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். திரைப்படங்களில்கூட அவ்வாறே கட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.சென்னை உயர் நீதிமன்றம்
பொதுவாக, நீதிபதிகளை இவ்வாறு அழைப்பது காலனித்துவ கால நினைவுச்சின்னம் என்றும், அடிமைத்தனத்தின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள். இதனாலேயே, நீதிபதிகளை `மை லார்ட்’ (My Lord), `Your Lordship' என்று வழக்கறிஞர்கள் யாரும் அழைக்கக் கூடாது என்று 2006-ல் இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனாலும், இன்றும்கூட நீதிமன்றங்களில் இத்தகைய சொல்லாடலை வழக்கறிஞர்கள் ஒரு வழக்கமாகவே பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், திரும்பத் திரும்ப `மை லார்ட்' என்று அழைத்ததற்கு, மூத்த நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா தலைமையிலான அமர்வில் இருந்த நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.உச்ச நீதிமன்றம்
அதாவது, ``எத்தனை முறைதான் மை லார்ட் என்று அழைப்பீர்கள். இவ்வாறு சொல்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், என்னுடைய சம்பளத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறேன். அவ்வாறு அழைப்பதற்கு பதில் நீங்கள் ஏன் `சார்' என்று அழைக்கக் கூடாது. இல்லையெனில், மூத்த வழக்கறிஞர் எத்தனை முறை `மை லார்ட்' என அழைத்தார் என்றுதான் அவர் எண்ணிக்கொண்டிருப்பார்" என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.`கழிவுநீர் அகற்றும்போது இறந்தால், ரூ.30 லட்சம் இழப்பீடு!' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?
http://dlvr.it/SyKR8X
Friday, 3 November 2023
Home »
» ``முதலில் `My Lord' எனச் சொல்வதை நிறுத்துங்கள்!" - வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!