ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடியளவில் கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் கனரா வங்கி புகாரளித்தது. அதாவது, நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848 கோடியில் ரூ.538 கோடி நிலுவையிலிருப்பதாகக் குற்றம்சாட்டியது. அதன்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள்மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்தது. பின்னர் இந்த வழக்கைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை, இதைப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்கு பதிவுசெய்தது.ஜெட் ஏர்வேஸ்
அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைதுசெய்து சிறையிலடைத்தது. இவ்வாறிருக்க, நேற்றைய தினம் டெல்லி நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் உட்பட ஐந்து பேர்மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாடுகளில் அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் வரும் பணத்தை, அசையா சொத்துககளை வாங்கப் பயன்படுத்தியதாகவும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்ட கடன் மரச்சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றை வாங்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குத் தொடர்புடைய ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியிருக்கிறது. இது குறித்து அமலாக்கத்துறை தனது X வலைதளப் பக்கத்தில், ``ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிரான பண மோசடி விசாரணையில், பண மோசடி தடுப்புச் சட்டம் 2008-ன் கீழ் நிறுவனத்துக்குத் தொடர்புடைய ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியிருக்கிறது.
ED has provisionally attached properties worth Rs 538.05 Crore under the provisions of PMLA, 2002 in the money laundering investigation against M/s Jet Airways (India) Limited (JIL). The attached properties include 17 residential flats/bungalows and commercial premises in the… pic.twitter.com/jJAOTaYG3o— ED (@dir_ed) November 1, 2023
இந்தச் சொத்துகளில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயரில் 17 குடியிருப்புகள்/பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவை, Jetair Private Limited, Jet Enterprises Private Limited, Jet Airways (India) Limited-ன் நிறுவனர் தலைவர் நரேஷ் கோயல், அவரின் மனைவி திருமதி அனிதா கோயல், அவரின் மகன் நிவான் கோயல் ஆகியோர் பெயரில் லண்டன், துபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றன" என்று பதிவிட்டிருக்கிறது.
2019-லேயே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது என்பதும், கடந்த மார்ச்சில் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயல் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
சங்கரய்யா டாக்டர் பட்டம்: ``காந்தியடிகளையே வேண்டாமென்று சொன்னவர்கள்" - ஆளுநரைச் சாடிய பொன்முடி
http://dlvr.it/SyGxGX
Thursday, 2 November 2023
Home »
» ``PMLA சட்டத்தின்கீழ் ஜெட் ஏர்வேஸின் ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!" - அமலாக்கத்துறை