தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். கட்சித் தாவல், வேட்பாளர் பின்னணி, கட்சிகளுக்கிடையே சாடல், ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் குடும்ப உறுப்பினர்கள் என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் `பரபர' சம்பவங்கள் நீண்டுகொண்டே போகும். அந்த வகையில், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் குடும்ப உறுப்பினர்களே ஒருவரையொருவர் எதிர்த்து களம் காண்பது, மக்களிடையே எதிர்பார்ப்பை `எகிற' வைத்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் (200 தொகுதிகளுக்கும்) ஒரே கட்டமாக நவம்பர் 25-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதை முன்னிட்டு தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அனல் பறக்கும் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இதில் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.ராஜஸ்தான் சட்டமன்றம்
1. கணவன் Vs மனைவி
சிக்கரின் தந்தா, ராம்கர் தொகுதியில் ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார், அந்தக் கட்சியின் மகளிர் பிரிவின் மாநிலத் தலைவராக இருப்பவர் ரீட்டா. ரீட்டாவை எதிர்த்து 2018-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை 920 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவரின் கணவர் வீரேந்திரன், காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார்.
2. அண்ணி Vs மைத்துனர்
தோல்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷோபாராணி களம் காண்கிறார். இவர் 2018-ம் ஆண்டு பா.ஜ.க சார்பில் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரான தன் மைத்துனர் ஷிவ்சரணை வெற்றிகண்டார். பின்னர் ராஜ்ய சபா தேர்தலில் இவர் குறுக்கு வாக்களித்ததால், பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து, அவர் காங்கிரஸில் இணைந்தார். அதே சமயம், அவருடைய மைத்துனர் பா.ஜ.க-வில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது ஷோபாராணி காங்கிரஸ் சார்பிலும், அவருடைய மைத்துனர் ஷிவ்சரண் பா.ஜ.க சார்பிலும் தோல்பூர் தொகுதியில் களம் காண்கின்றனர்.
3. மாமனார் Vs மருமகள்
நாகௌர் தொகுதியில் பா.ஜ.க சார்பில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜோதி மிர்தா போட்டியிடுகிறார். ஜோதி மிர்தாவை எதிர்த்து, அவரின் மாமனார் ஹரேந்திர மிர்தா காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார்.
4. சித்தப்பா Vs சகோதரர் மகள்
கெத்ரி தொகுதியில் பா.ஜ.க சார்பில் தரம்பால் குர்ஜார் போட்டியிடுகிறார். தேர்தல்
தரம்பால் குர்ஜாரை எதிர்த்து அவருடைய சகோதரரின் மகள் மணீஷா குர்ஜார், காங்கிரஸ் கட்சி சார்பில் களம் காண்கிறார்.
`வெல்லப்போவது யார்?' என ராஜஸ்தான் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது, இந்த நான்கு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல். யாரை, யார் வீழ்த்தப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!ராஜஸ்தான்: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் எஸ்.ஐ; காங்கிரஸ் அரசைச் சாடும் பாஜக!
http://dlvr.it/SyqLWf
Tuesday 14 November 2023
Home »
» Rajasthan: `கணவன் Vs மனைவி... மாமனார் Vs மருமகள்!' - தேர்தல் களத்தில் மோதும் குடும்ப உறுப்பினர்கள்