`ஐ.டி, அமலாக்கத்துறை எல்லாம் பாஜக-வின் அணிகளாகி விட்டன’ - உதயநிதி ஸ்டாலின்
நீட் விலக்கு கோரி திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்றார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதற்காக இன்று அவர் சத்தியமூர்த்தி பவன் வந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டனர். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் வகையில் இந்த இயக்கம் திமுகவால் நடத்தப்பட்டு வருகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, ``மத்தியில் ஆளும் பாஜகவின் அணிகளாக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன. விசாரணை அமைப்புகளை சட்டப்படி சந்திப்போம். நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை பொறுத்தவரையில் அனைத்து கூட்டணிக் கட்சிகளிடமும் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
தமிழகத்துக்கு நாளை 'ஆரஞ்ச்' அலர்ட்!
மழை
மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், தமிழகத்துக்கு நாளை ‘ஆரஞ்ச்’ அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக ஆரஞ்ச் நிற அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிரடிச் சோதனை!
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை கவனிக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்களில் இன்று காலை 7 மணி முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை மற்றும் திருவண்ணாமலையில் மட்டும் அவருக்கு தொடர்புடைய சுமார் 40 இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வருகின்றன.
விரிவான தகவலுக்கு.... IT Raid: ஐ.டி ரேடாரில் அமைச்சர் எ.வ.வேலு - 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடிச் சோதனை!
அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர்.அமைச்சர் எ.வ.வேலு
எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.`உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கலைஞர் போட்ட பிச்சை!' - சர்ச்சைப் பேச்சுக்கு எ.வ.வேலு வருத்தம்
http://dlvr.it/SyKPS9
Friday, 3 November 2023
Home »
» Tamil News Live Today: `ஐ.டி, அமலாக்கத்துறை எல்லாம் பாஜக-வின் அணிகள்!’ - உதயநிதி ஸ்டாலின்