'நடப்போம் நலம் பெறுவோம்'
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 'நடப்போம் நலம் பெறுவோம்' 8 கிலோ மீட்டர் சுகாதார நடைபாதை திட்டத்தை அமைச்சர் உதயநிதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்கள்.
குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு!
குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் அருகே சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேபாள நிலநடுக்கம் - 128 பேர் பலி!
நிலநடுக்கம்
நேபாளத்தில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் மையம் நிலநடுக்கத்தில் முதற்கட்ட அளவாக 5.6 ரிக்டர் பதிவானதாகவும், சுமார் 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்தது. அதன் பின்னர் 6.4 லிட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, இன்று கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மழை
சென்னையிலும் நள்ளிரவு தொடங்கி கனமழை நீடித்துவருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
http://dlvr.it/SyMm2P
Saturday 4 November 2023
Home »
» Tamil News Today Live: நேபாளத்தில் நிலநடுக்கம்; 128-ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!