மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியாவில் ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், கடந்த 7-ம் தேதி நக்சல் பாதிப்பு அதிகமிருக்கும் 20 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SyxffP
Friday, 17 November 2023
Home »
» Tamil News Today Live: மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டம்; சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டம் - தொடங்கியது வாக்குப்பதிவு!