ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்திருந்தார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``வருமான வரித்துறையை வைத்து, மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளைச் சோதனை செய்வது, பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சியினரை சோதனை செய்வது என்ற போக்கைக் கடைபிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க அமைச்சர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அப்படியென்றால், கடந்தகால அ.தி.மு.க ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லையா?சீமான்
அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் திடீரென்று பணக்காரர்களாகவில்லையே... அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல், தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு சோதனை நடத்துவது, பல சந்தேகங்களை எழுப்புகிறது. இதுவரை வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் எவ்வளவு ரொக்கம்... எவ்வளவு நகைகள் கைப்பற்றப்பட்டன என்று வெளிப்படையாக அறிவித்தது உண்டா?
60 ஆண்டுக்காலமாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால், காலை உணவுகூட இல்லாமல் குழந்தைகள் படிக்க வரும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. தி.மு.க-வினர் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் உணவைப் போன்று, பள்ளிகளில் காலையில் கொடுக்கப்படும் உணவு இருக்க வேண்டும். அழுகிய முட்டைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்குப் பதிலாக அந்த திட்டத்தையே தமிழக அரசு கைவிட்டு விடலாம்.விஜய்
சனாதனம் என்றால் என்னவென்ற ஒரு வரையறைக்கு நாம் வர வேண்டும். பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டைக் கடைப்பிடிப்பதுதான் சனாதனம் மற்றும் வர்ணாசிரமத்தின் கோட்பாடு. இந்த ஏற்றத்தாழ்வை எதிர்க்கும் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டதே குற்றம் என்று சொல்வதை ஏற்க முடியாது. நடிகர் விஜய் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, உறுதியாக அரசியல் கட்சி தொடங்குவார். அதன் பிறகு நாங்கள் கூட்டணி குறித்துப் பேசிவிட்டுச் சொல்கிறோம். தம்பி விஜய்யிடமும் `சீமானுடன் இணைந்து அரசியல் செய்வீர்களா?' என்ற கேள்வியை முன்வையுங்கள். வரும் மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. அதில், 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களைக் களமிறக்கவிருக்கிறேன்" என்றார்.`சாதியக் கொடுமைகளின் கூடாரமாகிவிட்டது தமிழ்நாடு..!' - திமுக அரசைச் சாடும் சீமான்
http://dlvr.it/SySCy3
Monday, 6 November 2023
Home »
» Vijay: `விஜய் அரசியல் கட்சி தொடங்குவார்; கூட்டணி குறித்துப் பேசிவிட்டுச் சொல்கிறேன்' - சீமான் ஆரூடம்