2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தோனி
தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். உடனே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்துக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை அந்த பதில் மனுவில் தெரிவித்திருப்பதாகக் கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.
மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் அமர்வு, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்திருப்பதாகக் கூறி, அவருக்கு 15 நாள்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
http://dlvr.it/T09r8z
Friday, 15 December 2023
Home »
» தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாள்கள் சிறைத் தண்டனை!