நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக (பயிற்சி) இருந்தவர் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங். சிறு சிறு வழக்குகளில் சிக்கி கைதுசெய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வருவோரின் பற்களைப் பிடுங்கியும், ஆணுறுப்பைத் தாக்கியும் சித்ரவதை செய்வதாகப் புகார் எழுந்தன. இதையடுத்து பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முதலில் இந்த வழக்கை விசாரணை செய்தார். இந்த நிலையில், பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர்மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் நான்கு வழக்குகள் பதிவுசெய்தது. நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்
உயர்மட்ட விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார். அவர் இரண்டு கட்டமாக விசாரணை நடத்திவந்தார். முதற்கட்ட விசாரணையில் யாரும் ஆஜராகவில்லை. இரண்டாம் கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட 10 பேர் அவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதன் விசாரணை அறிக்கையையும் சமர்ப்பித்தார். இதையடுத்து இந்த வழக்கு நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள்மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதற்கிடையில் அமுதா ஐ.ஏ.எஸ் நடத்திய விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட அருண்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ”வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் சி.சி.டி.வி காட்சி ஆதாரங்கள் எதுவுமில்லை. இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்தது. இதன் குற்றப்பத்திரிகையும், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும்” என சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி சங்கர் பதிலளித்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜரானவர்கள்
இந்த நிலையில், வேதநாரயணன், சூர்யா, வெங்கடேசன், அருண்குமார் ஆகியோரின் புகார்களின் அடிப்படையில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி, உதவி ஆய்வாளர் முருகேஷ், இசக்கிராஜா, கார்த்திக், சதாம் உசேன், ராஜ்குமார், ஆபிரகாம் ஜோசப், ராமலிங்கம், சுடலை, விக்னேஷ், முத்து செல்வகுமார், சந்தனகுமார், மணிகண்டன், விவேக் ஆண்ட்ரூஸ் ஆகிய காவல்துறை அலுவலர்கள்மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் நெல்லை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இந்த நான்கு வழக்குகளும் நீதிமன்ற நடுவர் திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், ஏ.எஸ்.பி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 காவல்துறையினரும் ஆஜராகினர். “குற்றம்சாட்டப்பட்டர்களை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை. பல் பிடுங்கியதற்கு ஆதாரமாக இருக்கும் கட்டிங் பிளேயர், ரத்தக்கறை படிந்த ஆடைகள், அவர்களை அழைத்துவர பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்யவில்லை. இவர்களைக் கைதுசெய்ய வேண்டும். முறையாக விசாரணை நடத்தி பல் பிடுங்கியதற்கு பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாராஜன் வாதிட்டார். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
விசாரணைக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன். இந்த வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. 15 பேருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. பல்வீர் சிங் நான்கு வழக்குகளிலும் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் அவருக்கு நான்கு நகல்கள் வழங்கப்பட்டன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T0F4rs
Sunday, 17 December 2023
Home »
» விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் - 15 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நெல்லை நீதிமன்றம்!
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் - 15 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நெல்லை நீதிமன்றம்!
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!