ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது தேரா இஸ்மாயில் கான் மாவட்டம். பழங்குடிகள் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தின் எல்லையில், தாராபன் காவல் நிலையம் இருக்கிறது. இந்தக் காவல் நிலையம், பாகிஸ்தான் ராணுவ முகாமாகச் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தைக் காவல் நிலையத்தின் மீது மோதி தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தாக்குதல்
இந்தத் தாக்குதலில் சுமார் 23 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு, ஆப்கானிஸ்தான் ஆதரவு தீவிரவாதக்குழுவான தெஹ்ரிக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் குழு பொறுப்பேற்றிருக்கிறது. இந்தத் தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், பாதுகாப்புப் படைகள் அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டு, தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக, பாகிஸ்தானின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியமைத்தவுடன், பாகிஸ்தானுடனான போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.பாகிஸ்தான்
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`குழந்தைகளைப் பார்க்க வேண்டும்' - பாகிஸ்தான் காதலனைத் திருமணம் செய்த அஞ்சு இந்தியாவுக்கு வருகை!
http://dlvr.it/T04tVt
Wednesday, 13 December 2023
Home »
» பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்... 23 வீரர்கள் பலி