ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் (டிச. 11) தீர்ப்பு வழங்கியது. `பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும்’ என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அங்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கெனவே, ஜம்மு காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. ஜம்மு காஷ்மீர்
பா.ஜ.க., மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவந்த நிலையில், 2018-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து பா.ஜ.க விலகிக்கொண்டது. எனவே, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக மத்திய பா.ஜ.க அரசு ரத்துசெய்தது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டு, தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகளை முடக்கிவிட்டு, முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு பிரிவு 370-ஐ நீக்குவதற்கான நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு இறங்கியது. ஜம்மு காஷ்மீர்
பின்னர், வீட்டுச் சிறையில் இருந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டாலும், ராணுவத்தின் துணையுடன்தான் அங்கு ‘அச்சுறுத்தலான’ ஆட்சி நடைபெற்றுவருவதாக அங்குள்ள அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், ‘அது ஒரு மயான அமைதி’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், உடனடியாக சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கை. சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க முடியாது என்பதில் உறுதியாக இருந்த பா.ஜ.க., ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிவந்தது. 2018-ம் ஆண்டிலிருந்து துணைநிலை ஆளுநரின் ஆட்சியே நடைபெற்றுவருவதால், உடனடியாக அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று அந்த மாநிலத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கிறது. `பிரிவு 370 ரத்துசெய்யப்பட்டது சரியே’ என்ற தீர்ப்பை தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகள் ஏற்கவில்லை. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பல கட்சிகள் வரவேற்கின்றன.நாடாளுமன்றத்தில் பெரியாரை மேற்கோள் காட்டியது தவறா?! - சர்ச்சையும் பின்னணியும்
அதேநேரத்தில், ‘எதற்காக அடுத்த செப்டம்பர் 30 வரை காத்திருக்க வேண்டும்... உடனடியாக அங்கு தேர்தலை நடத்துங்கள்’ என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய அரசு மீட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரை மீட்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா
உடனடியாகத் தேர்தலை நடத்தி, ‘ராணுவ ஆட்சி’க்கு முற்றுப்புள்ளி வைத்தாலே அங்கு பல மாற்றங்கள் நிகழும். மேலும், உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால், அதுவும் ஜம்மு காஷ்மீரில் சில மாற்றங்களை உண்டாக்கும். `ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று பா.ஜ.க-வினர் கூறிவந்தாலும், அங்கு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் முழுமையாகக் குறையவில்லை. அதைக் கட்டுப்படுத்துவது சவால் மிகுந்ததாகவே இருக்கும். இதற்கெல்லாம், மத்திய ஆட்சியாளர்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T04tFB
Wednesday, 13 December 2023
Home »
» பிரிவு 370 ரத்து: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி... ஜம்மு காஷ்மீரில் இனி என்ன?!