தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குச்சாவடி பாசறை அமைத்து வருகிறோம். சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அரசு திறமையாகக் கையாண்டிருக்கிறது. அதில் குறைபாடுகள் இருப்பதாகச் சொல்ல முடியாது.கே.எஸ்.அழகிரி
இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின்படி உருவாகிய புயல், சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரம் மையம் கொண்டிருந்தது. அந்த17 மணி நேரமும் மழை பெய்தது. அதை மழை பொழிவு என்று சொல்ல முடியாது, மேகப் பிளவு ஏற்பட்டது. இந்தியாவில் 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தால், எந்த நகரமும் தாங்காது. பேரிடர் என வந்த பிறகு எவ்வளவு சரி செய்ய முடியுமோ அதனை அரசாங்கம் திறமையாகச் செய்திருக்கிறது.
இது இயற்கை பேரிடர், மனித பிழையல்ல. எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள், நியாயமானவர்கள் என பலரும் இருப்பார்கள். எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நியாயமானவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் ஏற்றுக்கொள்ளக் கூடியது.கும்பகோணம் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி
அரசு ரூ.4,000 கோடி ரூபாய்க்கான செலவை முறையாகச் செய்திருக்கிறதா என்பதை கணக்கு தணிக்கையில் முடிவுசெய்வார்கள். அதை நம்மைப் போன்றவர்கள் முடிவுசெய்ய முடியாது, குறை சொல்வது எளிது. இந்தியா கூட்டணி பளிச்சென்று இருக்கிறது. மத்திய அரசிடம் 5,000 கோடி ரூபாய் மாநில அரசால் கேட்கப்பட்டிருக்கிறது. இது பாதிப்பல்ல... பேரிடர் எனக் கருதி மத்திய அரசு அதை வழங்க வேண்டும்" என்றார்.மிக்ஜாம் புயல்: `திமுக பக்கம் சாயும் கமல்..!’ - ஆதரவா, ஆதாயமா?!
http://dlvr.it/T03x9Y
Wednesday, 13 December 2023
Home »
» ``அரசு ரூ.4,000 கோடி செலவு செய்திருக்கிறதா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது!” - கே.எஸ்.அழகிரி