மிக்ஜாம் புயல் பாதிப்புகளிலிருந்து படிபடியாக மீண்டுகொண்டிருக்கிறது சென்னை மாநகர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும், மழைநீர் வடிய முறையான நீர்வழிப்பாதைகள் இல்லாததும்தான் பெருவெள்ளத்துக்கான அடிப்படைப் பிரச்னை என்ற பேச்சு எழுந்துவரும் சூழலில், ``சென்னையின் புறநகரான ராமஞ்சேரி என்ற இடத்தில் புதிய ஏரியை உருவாக்க அரசு முயல்கிறது” எனப் பேசியிருக்கிறார் நீர்வளத்துரை அமைச்சர் துரைமுருகன். அவர் பேசியது குறித்தும், அதன் சாத்தியங்கள் குறித்தும் அலசினோம்.புழல் ஏரி
கடந்த டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகர் முழுக்க பெருமழை பெய்தது. வரலாறு காணாத பெருமழைப்பொழிவால் நகரே வெள்ளக்காடானது. பெருமழைக்குப் பிறகு புழல் ஏரியைப் பார்வையிட்ட தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``சென்னை புறநகரில் ராமஞ்சேரி என்ற இடத்தில் புதிய ஏரியை உருவாக்க அரசு முயல்கிறது. சமீபத்தில்கூட முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது குறித்துப் பேசியிருக்கிறேன்” என்றார்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``ரூ.4,000 கோடி செலவில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு டிசம்பர் 4-ம் தேதி பெய்த பெருமழைக்கு போதுமான அளவு கைகொடுக்காதது பெரும் பிரச்னையாகிவிட்டது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிமீக்குள்ளாக மையம்கொண்டிருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ஆகவே, மழைநீரைக் கடல் உள்வாங்கவில்லை. மழைநீர் வடிகால் அமைப்பும் 20 செ.மீ வரைதான் தாக்குப்பிடிக்கும். ஆனால், பெய்ததோ 40 செ.மீ. இதன் விளைவாக நீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளேயே தேங்கிவிட்டது. கடல் உள்வாங்குவதில் பிரச்னை ஏற்படாமல் இருந்திருந்தாலும், மழைப்பொழிவு குறைந்திருந்தாலும் பாதிப்புகள் குறைந்திருக்கும். போதிய ஏரிகள் இல்லை, அதனால்தான் நீர் தேங்கிவிட்டது என்ற வாதத்துக்கு இடமில்லை” என்றனர்.சென்னை மழை
நம்மிடம் பேசிய பூவலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வன், ``முதலில் நினைத்த இடத்தில் ஓர் ஏரியை அமைத்துவிட முடியாது. எதனடிப்படையில் அமைச்சர் துரைமுருகன் இப்படிச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. ஓர் ஏரியை உருவாக்குகிறோம் என்றால் அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,
பரந்தூரில் ஏற்கெனவே இருக்கும் 13 நீர்நிலைகளை அழித்துவிட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்கிறார்கள், மறுபக்கம் ஏரியை உருவாக்குவோம் என்கிறார்கள். என்ன லாஜிக் இது... ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாக்க நம்மிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது... ஏரிகளை ஆக்கிரமித்து வீடு, கட்டுமானங்களை அமைத்துவிட்டு ஏரியை உருவாக்குவோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றார். பரந்தூர்
நம்மிடம் பேசிய நீரியல் ஆய்வறிஞர்கள் சிலர், ``ஏரியை உருவாக்குவது அவசியமற்றது எனச் சொல்லிவிட முடியாது. அதேசமயம் சென்னையில் புதிய ஏரியை அமைப்பதற்கு முன்பு தமிழ்நாடு அரசுக்குப் பல்வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. ஆக்கிரமித்து அழித்தது போக சென்னையில் 4,100 நீர்நிலைகள் இன்னும் இருக்கின்றன. அந்த நீர்நிலைகளைத் தூர்வாரி, முறைப்படுத்தினால் 150 சி.எம்.சி நீரைத் தேக்கலாம். சென்னை மழைநீர் செல்ல பாதையும் விரிவடையும். தற்போதிருக்கும் பிரச்னைக்குக் கிட்டத்தட்ட தீர்வு கிடைத்துவிடும். ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளைச் சீர்செய்யாமல், புதிய ஏரி அமைப்பதால் பயனில்லை. அப்படிப் புதிய ஏரி அமைத்தாலும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து புதிய ஏரிக்கு நீர் சென்றடையும் பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.
அதற்கென ஆக்கிரமிப்புகளை நீக்க அரசு முன்வருமா என்பதெல்லாம் சந்தேகம்தான். மறுபுறம் ஓர் ஏரியை அமைத்திடுவது அவ்வளவு எளிதல்ல. அமைவிடத்தின் புவியல் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது. ஒரு புதிய ஏரியை அமைக்க பொருட்செலவும் கடுமையானதாக இருக்கும்” என்றனர்.சென்னை மழை
நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட அ.தி.மு.க-வினர், ``தமிழ்நாடு அரசுக்கு எரிகளை உருவாக்குவது, குளங்களைத் தூர்வாருவது போன்ற நோக்கங்களெல்லாம் கிடையவே கிடையாது. உண்மையிலேயே ஏரியைக் கட்டமைக்கும் எண்ணம் கொண்டிருந்தால் கூவத்தைத் தூர்வாரி மிக்ஜாம் புயல் பாதிப்புகளைக் குறைத்திருப்பார்கள். மழைநீர் வடிகால் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விகளைச் சமாளிப்பதற்கு இப்படிப் பேசியிருப்பார் அமைச்சர். நீர்மேலாண்மையில் அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை மிக்ஜாம் புயல் பட்டவர்த்தனமாக மக்களுக்குத் தெரியப்படுத்திவிட்டது” என்றார்.
`ராமஞ்சேரியில் ஏரி அமைக்கப்படும்` என்பது மட்டுமே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தகவல். அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா... ஏரி அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறதா... ஏரி அமைக்கப்படும் என்றால் அதன் செயல்திட்டங்கள் என்னனென்ன என்பதை தமிழ்நாடு அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். பொறுத்திருப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தூக்கத்தில் துரைமுருகன்... துக்கத்தில் விவசாயிகள்!
http://dlvr.it/SzzrYz
Monday, 11 December 2023
Home »
» ராமஞ்சேரி: `புதிய ஏரி திட்டம்’... அமைச்சர் துரைமுருகன் கருத்தும் தேவையும் - ஓர் அலசல்!