பிளான் போடும் அமலாக்கத்துறை!‘ஏதாவது பெருசா செஞ்சே ஆகணும்...’
அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச வழக்கில் தூக்கியது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதையெல்லாம் பிரஸ்டீஜ் பிரச்னையாகப் பார்க்கிறதாம் மத்திய அரசு. அதேநேரத்தில், ‘ஏதாவது பெருசா செஞ்சே ஆகணும்... திருப்பியடிக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திலெல்லாம் இதேபோல ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று அமலாக்கத்துறை அதிகாரிகளும் தங்களுக்குள் பேசத் தொடங்கிவிட்டார்களாம்.அங்கித் திவாரி
‘மணல் குவாரி விவகாரத்திலேயே ஏதாவது காக்கியையும் கோத்துவிட்டு கதகளி ஆடலாமா?’ என்றெல்லாம் தமிழ்நாட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய அரசுத் தரப்பில் அனுமதி கேட்டார்களாம். ‘ஆத்திரத்தில் எதையாவது செய்து, மேலும் அசிங்கப்பட்டுவிடக் கூடாது. கொஞ்சம் நிதானமாக, ஆலோசித்து காரியத்தில் இறங்கலாம்’ என்று டெல்லியிலிருந்து சொல்லியிருப்பதாகத் தகவல்.புலம்பும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்!இளைஞரணி மாநாட்டுக்கு நன்கொடை...
சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடக்கவிருக்கும் கட்சி இளைஞரணி மாநாட்டுச் செலவுக்கு மூன்று லட்டுகள், அதை நடத்துவது குறித்து நடக்கும் செயல்வீரர்கள் கூட்டச் செலவுக்கு இரண்டு லட்டுகள் என மொத்தம் ஐந்து லட்டுகளை நன்கொடையாகக் கொடுத்தே ஆக வேண்டும் என ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சித் தலைவர்களிடம் வசூலில் இறங்கியிருக்கிறதாம் மா.செ-க்கள் தரப்பு. உதயநிதி ஸ்டாலின்
“இவ்வளவு லட்டை ஒரே நேரத்தில் தரணுமா?” என்று மயக்கம் போடாத குறையாகக் கேட்கிறார்களாம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள். ‘நீங்க ஈஸியா எங்ககிட்ட எதிர்க்கேள்வி கேக்குறீங்க. நாங்க மேலிடத்தை இப்படிக் கேட்க முடியுமா... கேட்டதை வேகமாக் கொடுங்கப்பா...’ எனக் கறாராகச் சொல்கிறார்களாம் மா.செ-க்கள். என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் உள்ளாட்சித் தலைவர்கள்.எம்.பி-யை மன்னிப்புக் கேட்கவைத்த தி.மு.கமக்களவையில் சர்ச்சைக் கருத்து...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பேசிய தி.மு.க எம்.பி செந்தில்குமார், “வடக்கே இந்துத்துவாவை ஆதரிக்கும் மாநிலங்கள் அல்லது நாங்கள் ‘மாட்டு மூத்திர மாநிலங்கள்’ என்று அழைக்கும் மாநிலங்களில்தான் பா.ஜ.க வெற்றிபெற முடியும். தென்னிந்தியாவுக்குள் பா.ஜ.க-வால் வரவே முடியாது” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க-வினர் மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரெனத் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு சமூக வலைதளப் பக்கத்தில் எழுதிய செந்தில்குமார், மக்களவையிலும் வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார். `அவர் அப்படி மன்னிப்புக் கேட்கிற ஆளில்லையே...’ என்று பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். செந்தில்குமார்
“ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது செந்தில்குமார் பேசியிருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுக்கும் முன்பே சரிசெய்துவிட வேண்டும் என நினைத்த தி.மு.க தலைமை, உடனடியாக செந்தில்குமாரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவிட்டது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.அதிகாரியை `கப்சிப்’ ஆக்கிய அமைச்சர்!தலைநகர் மழை, வெள்ளப் பிரச்னை...
மழை, வெள்ள பாதிப்புகளின் மீட்புப்பணிகள் குறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி சில உண்மைகளை வெளிப்படையாகப் பேச, அது ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கடுப்பான தலைநகர அமைச்சர் அந்த அதிகாரியை விட்டுவிட்டு, மாநகராட்சியின் முதன்மையானவரிடம் சீற்றம் காட்டியிருக்கிறார். “உங்கள் நோக்கத்துக்கு ஏதாவது சொல்லிவிட்டுப் போனால், பிரச்னையை நாங்கள்தானே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதனால், இனி நீங்கள் எங்கும் எதுவும் பேச வேண்டாம்.
நாங்கள் சொல்லும்போது, சொல்வதை மட்டும் பேசினால் போதும்” எனச் சொல்லச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர். முதன்மையானவரும் அதை அப்படியே அந்த அதிகாரி காதில் சொல்ல, எதுவும் பேச முடியாமல் `கப்சிப்’ ஆகிவிட்டாராம் அந்த அதிகாரி. “சென்னை வெள்ளப் பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு, கோட்டையில் பஞ்சாயத்து வைப்பதற்குத் தயாராகிவருகிறார் அந்த மூத்த அதிகாரி” என்று கிசுகிசுக்கிறது ரிப்பன் மாளிகை அதிகாரிகள் வட்டாரம்.திண்டாட்டத்தில் திருப்பூர் தி.மு.க!கோஷ்டிக்குள் கோஷ்டிச் சண்டை...
திருப்பூர் தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ கோஷ்டிக்கும், மேயர் தினேஷ்குமார் கோஷ்டிக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் உச்சத்தில் இருக்கிறது. இதில் மேயர் தினேஷ்குமார் தரப்பு, செல்வராஜ் மீது ஏகப்பட்ட புகார்களைத் தலைமைக்கு தட்டிவிட்டிருக்கிறது. அதில் கொஞ்சம் உண்மையும் இருப்பதால், தலைமையின் அதிருப்திப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறாராம் செல்வராஜ். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காகத் தீவிர கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கியிருக்கிறாராம் செல்வராஜ்.தினேஷ்குமார்
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவரை மாற்றிவிட வேண்டும் என்று மேயர் தினேஷ்குமார் தரப்பு காய்நகர்த்த, அப்படி அவரது பதவி பறிக்கப்பட்டால், அதை எப்படியாவது நாம் கைப்பற்றிவிட வேண்டுமென தீயாக வேலை செய்கிறாராம் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ். இதனால் ஒரே கோஷ்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், தங்கராஜுக்கு இடையிலேயே இப்போது கோஷ்டி அரசியல் உருவாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘ச்சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்’ என இதில் எதிலுமே கலந்துகொள்ளாமல் அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் கோஷ்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தனிக்கதை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SzqTXC
Thursday, 7 December 2023
Home »
» கழுகார் அப்டேட்ஸ்: எம்.பி-யை மன்னிப்புக்கேட்க வைத்த திமுக|வெள்ளம், அதிகாரியை கப்சிப் ஆக்கிய அமைச்சர்