தே.மு.தி.க-வின் பொதுக்குழு - செயற்குழுக் கூட்டம் 14-ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பை இன்று நடத்தினார். அப்போது, ``அரசியலில் சவால்கள் இருக்கும். குறிப்பாக பெண்கள் அதிக சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். அதற்குச் சிறந்த உதாரணம் ஜெயலலிதா அம்மையார். விஜயகாந்தின் மனைவியாகவே கடைசிவரை இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், தலைவர் எனக்குப் பொருளாளர் பதவியை வழங்கினார்.பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க-வின் தொண்டர்கள் பல ஆண்டுகளாக கேப்டனிடம் தெரிவித்த கோரிக்கையை ஏற்று, இப்போது பொதுச்செயலாளர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே, இந்தக் கட்சி எதை நோக்கமாகவைத்துத் தொடங்கப்பட்டதோ அதை நிறைவேற்றுவதுதான் எங்களின் இலக்கு. கேப்டனுடன் திருமணம் ஆனதிலிருந்து பயணிக்கிறேன். ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், பிறகு கொடி, கட்சி, அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் என வளர்ந்துவந்தது இந்தக் கட்சி. இத்தனையிலும் தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்.
2011-வரை தே.மு.தி.க யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டது. அப்போது வரை கட்சி அபரிமிதமாக வளர்ச்சி கண்டது. முதல் தேர்தலில் 8.33%, என்றும் அடுத்த தேர்தலில் 10.3% என்றும் வாக்கு சதவிகிதம் வளர்ந்தது. கூட்டணி என்று சென்றதும், பல சவால்களும், துரோகமும்தான் கட்சியின் சறுக்கலுக்குக் காரணமாக இருந்தன. விஜயகாந்த் நம்பிய எம்.எல்.ஏ-க்கள் முதுகில் குத்தியதால்தான் அவரின் உடல்நிலையில் இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இனி வெற்றி வியூகம் மட்டுமே அமைப்போம்.பிரேமலதா விஜயகாந்த்
அதன் மூலம் வெற்றிபெறுவோம். பொதுக்குழுக் கூட்டம் திடீரென எடுத்த முடிவல்ல. அது ஓர் ஆண்டுக்காலமாக திட்டமிட்டதுதான். என்னுடைய ரோல் மாடலாக நான் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவை எடுத்துக்கொள்கிறேன். என்னைச் சுற்றிப் பெண்களுக்கு அதிகம் பதவிகள் வழங்கப்படும். எனக்கு தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை போனிலும், சமூக வலைதளங்கள் மூலமும் தெரிவித்திருக்கிறார்கள். கூட்டணி குறித்தெல்லாம் தேர்தலின்போதுதான் முடிவுசெய்ய முடியும். கடவுள் நமக்குத் தேவையான நீரைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டின் அரசு அதைச் சேமிக்கும் திறனற்று இருக்கிறது. திட்டமிடுதல் இல்லை. அதனால்தான் அனைத்து தண்ணீரும் கடலில் கலந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த தண்ணீர் சேமிக்கப்பட்டால் மற்றவர்களிடம் நாம் கையேந்த வேண்டியதில்லை. ஆளுநரும் முதல்வரும் அவர்களுக்கான வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால், ஆளுநர் செய்வது தவறும் அல்ல, முதல்வர் செய்வது அனைத்தும் சரியானதுமல்ல. ஜால்ரா தட்டுபவர்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதெல்லாம் இல்லை. நிவாரணத் தொகை ரூ.6,000 தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.பிரேமலதா விஜயகாந்த்
ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மட்டும் போதாது. அவர்களின் வாழ்வாதாராமே பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதுபோல இன்னோரு வெள்ளம் வராமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லோர் வாயையும் பணத்தை வைத்து அடைக்க முயல்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டும். எண்ணூர் - பழவேற்காடு வரை எண்ணெய் கடலில் கலந்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிங்காரச் சென்னை எனக் கூறியவர்கள் இந்தத் தி.மு.க-காரர்கள். இந்த மழையில் அதைப் பார்த்துவிட்டோம். இதுதான் வாயால் வடை சுடுவது என்பது.
ஆறு முறை கலைஞர், ஐந்து முறை ஜெயலலிதா முதல்வராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்றுவரை மழைநீரில் தமிழ்நாடு சிக்கிக்கொள்கிறது என்றால் என்ன பொருள் என்பதைச் சிந்திக்க வேண்டும். மகனுக்கான பதவி என்பதெல்லாம் அவருக்கு அனுபவம் பெறும்போது கேப்டன் வழங்குவார்" எனத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
விஜயகாந்த் பதவியில் பிரேமலதா - தே.மு.தி.க-வின் பயணம் இனி..?!
http://dlvr.it/T0D1Rz
Saturday, 16 December 2023
Home »
» "ரோல் மாடல் ஜெயலலிதா; திமுக வாயால் வடை சுடுகிறது; ஆளுநர் செய்வது தவறல்ல!" - பிரேமலதா சொல்வதென்ன?