மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது. புதிய முதல்வராக மோகன் யாதவ் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் இரண்டு பேர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். புதிய அமைச்சரவை பதவியேற்றப் பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துப் பேசிய முதல்வர் மோகன் யாதவ், ``திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்ய தடைவிதிக்கப்படுகிறது. மோகன் யாதவ்
ஏற்கெனவே இருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, இந்த தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து மக்கள் மத்தியில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்பினரும், போலீஸாரும் டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.
அயோத்தியிலுள்ள ராமர் கோயிலுக்குச் செல்பவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம். அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இருக்கும் ஒலிபெருக்கிகள் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்ய, பறக்கும்படை ஒன்று அமைக்கப்படும்.அயோத்தி ராமர் கோயில்
அந்தப் படை மூன்று நாள்களில் ஆய்வுசெய்து, தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும். அதோடு ஒலிபெருக்கிகள் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் செயல்படுகிறதா என்று ஆய்வுசெய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக ஒலிபெருக்கி பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.மத்தியப் பிரதேசம்: மூன்று மாநில அரசுகளின் வான்டட் மாவோயிஸ்ட் - காட்டுக்குள் என்கவுன்ட்டர்!
http://dlvr.it/T06g32
Thursday, 14 December 2023
Home »
» புதிய முதல்வரின் முதல் உத்தரவு; மத்தியப் பிரதேசத்தில் திறந்தவெளி முட்டை, இறைச்சி விற்பனைக்குத் தடை!