தெலங்கானாவில் இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தவர் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கே.சி.ஆர்., காமாரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். மேலும், பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவி காங்கிரஸிடம் தனது ஆட்சியைப் பறிகொடுத்தார். அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் மக்களையும், தனது கட்சித் தொண்டர்களையும் சந்தித்துவந்தார்.தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர்
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைதராபாத்திலுள்ள அவரது வீட்டில் அவர் தவறி கீழே விழுந்துவிட்டதாகவும், அதிகாலையிலேயே ஹைதராபாத்திலுள்ள யசோதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 69 வயதான கே.சி.சந்திரசேகரராவின் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, ``தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் காருவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
சீதாக்கா: `நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர்' - தெலங்கானா இரும்புப் பெண்மணியின் நெடும்பயணம்!
http://dlvr.it/SzsyKv
Friday, 8 December 2023
Home »
» கே.சி.ஆர்: கீழே விழுந்ததில் எலும்பு முறிவு; அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை!