அம்பத்தூர் மண்டலகுழுத் தலைவரும், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.கே.மூர்த்தி இல்லத் திருமண விழா சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ``மணமகளின் அப்பாவுக்கு நான்தான் திருமணம் நடத்திவைத்தேன். தற்போது அவர்களின் மகளுக்கும் நானே திருமணம் நடத்திவைத்திருக்கிறேன். இவர்களின் பிள்ளைகளுக்கும் நான்தான் திருமணம் நடத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இது கழகக் குடும்பம். குடும்பம் என்றதும் வாரிசு அரசியல் என விமர்சிப்பார்கள்.முதல்வர் ஸ்டாலின்
குடும்பம் இருப்பவருக்குத்தானே அதன் அருமை தெரியும். அறிஞர் அண்ணா கழகத் தொண்டர்களை, 'தம்பி' என அழைத்தார். கலைஞர் 'உடன் பிறப்பே' என அழைத்தார். எனவே, தி.மு.க என்பது கழகக் குடும்பம். கோடிக்கணக்கான குடும்பங்களின் கலங்கரை விளக்குதான் தி.மு.க. சமீபத்தில் 47 வருடங்களில் பார்க்க முடியாத அளவிலான பெருமழை பெய்திருக்கிறது. அந்த மழை வருவதற்கு நான்கைந்து நாள்களுக்கு முன்பு மழை குறித்து எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், இவ்வளவு பெரிய மழை வரும், ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என எச்சரிக்கவில்லை.
பெருமழை, கனமழை, காற்றுடன் கனமழை, புயல் மழை என்றுதான் கூறப்பட்டது. ஆனால், அந்த எச்சரிக்கைகளையெல்லாம் மீறி, 47 வருட வரலாற்றில் காண முடியாத அளவு மழை பெய்தது. தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காகச் செயலாற்றும். அதற்கு உதாரணமாக கொரோனா பெருந்தொற்றைக் கூறலாம். கொரோனா தொடங்கியபோது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க `ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு, உடை, இடம் எனத் தேடித் தேடிச் சென்று உதவிகளை செய்தது என்பதை மறந்துவிடாதீர்கள். முதல்வர் ஸ்டாலின்
2015-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்துகொண்டிருந்தது. ஆனால், அதைத் திறந்துவிட முதல்வரிடம் கேட்க அதிகாரிகள் பயந்தார்கள். அதனால் விளைந்ததுதான் 2015 வெள்ளம். ஆனால், நமது அரசு, கொஞ்சம் கொஞ்சமாக செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து, பெரும் ஆபத்திலிருந்து தவிர்த்திருக்கிறோம். இந்த மழை பாதிப்பில், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் களத்தில் இருந்தார்கள். 2015-ம் ஆண்டில் பொதுமக்கள் வழங்கிய உதவிகளில்கூட, அ.தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.
ஆனால், தி.மு.க யாராக இருந்தாலும் கட்சி, ஆட்சிப் பாகுபாடு இல்லாமல் உதவிசெய்தது. வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, சென்னை முழுவதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்படும். ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு அதிகாரிகள், சென்னை வெள்ளம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்தக் குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, 'வெள்ள பாதிப்பை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கையாண்டிருக்கிறது' எனத் தெரிவித்தார்கள்" எனப் பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
/>
மிக்ஜாம் புயல்: `நிவாரணத் தொகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?' - அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு
http://dlvr.it/T07N5c
Thursday, 14 December 2023
Home »
» மிக்ஜாம் புயல்: "ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என எச்சரிக்கவில்லை!" - முதல்வர் ஸ்டாலின்