எண்ணூர் சுற்றுவட்டார பகுதியிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய்க் கழிவுகள் கசிந்திருக்கும் விவகாரம் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. நீர்நிலைகளில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணிகள் அரசு தரப்பிலும் சம்பந்தப்பட்ட CPCL நிறுவனத்தின் தரப்பிலும் மேற்கொள்ள வேண்டுமென பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் மீட்பு பணிகள் திருப்திகரமாக இல்லையென எண்ணூர்வாசிகள் குற்றம் சுமத்திவருவதை தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம். எண்ணூர்: கொசஸ்தலை ஆறு
நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், ``எண்ணூர், மணலி சுற்றுவட்டார நீர்நிலை பகுதிகளான கொசஸ்தலை ஆறு, பங்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு எண்ணெய்க் கழிவு கலந்தது தொடர்பான வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து தாமாக முன்வந்து விசாரித்தது பசுமை தீர்ப்பாயம். விசாரணையில் CPCL நிறுவனத்திலிருந்து எண்ணெய்க் கழிவு கலந்தது தெரிய வந்தது. இதில் முதன்மையாக நீர்நிலைகளில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றிட வேண்டுமென கறார் உத்தரவு பிறப்பித்தது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம். கழிவு நீர்
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட CPCL நிறுவனமும், தமிழ்நாடு அரசும் எண்ணெய்யை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணிகள் குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் கருத்து தெரிவித்த CPCL நிறுவனம் எண்ணெய்யை அகற்ற உரிய கருவிகளை பயன்படுத்துகிறோம் என உறுதியளித்துள்ளது” என்றனர்.
இந்நிலையில் எண்ணெய் கழிவுகள் அகற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் அமைப்பின் ஜி.சுந்தர்ராஜன் `` தேங்கிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது மிகதவறான செயல், வன்மையாக கண்டிக்கிறோம்” என அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.கொசஸ்தலை ஆறு
இங்கு நிலைமை மோசம் என பேச ஆரம்பித்த எண்ணூர் பகுதியை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பூஜா குமார், ``ஆற்றுப் பகுதிகளில் கலந்த எண்ணெயை அகற்றும் மீட்பு பணிகள் திருப்திகரமாக இல்லை. பணிகள் மெத்தனமாக நடக்கிறதென்பதைவிட நீரோடு கலந்திருக்கும் எண்ணெய் கழிவை அகற்ற உள்ளூர் மக்கள் பயன்படுத்தபப்ட்டு வருகிறார்கள். எண்ணெய் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. அதனை தகுந்த உபகரணங்கள் இன்றி வெறும் கையால் அள்ளும் அவல நிலையே நீடிக்கிறது. எண்ணெய் கொட்டியுள்ள பகுதிகளிலிருந்து சுவாசிப்பது நுரையீரல் பிரச்னைகளையும், அங்கே இருப்பதே தோல் நோய்களுக்கு வழிவகுக்கும் நிலை ஏற்படும். ஆகவே மீட்பு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முறையான பயிற்சியும் உபகரணங்களும் அழிக்கப்பட வேண்டும்” என்றார்
நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியினர் சிலர், ``தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால்தான் எண்ணெய் கலப்பே நடந்திருக்கிறது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முறையாக ஆய்வு மேற்கொண்டிருந்தால் விதிமீறல்களை முன்பே தடுத்திருக்கலாம். அதனை செய்ய தவறியதோடு, தற்போது மீட்பு பணிகளிலும் மெத்தனமும் அலட்சியமும் காட்டுவது வருத்தமளிக்கிறது.
எண்ணெய்க் கலந்துள்ள பகுதிகளை சுற்றி உடனடியாக அதிகளவில் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். மீட்பு பணிகள் விரைந்து நடக்கவேண்டுமென அப்பாவி மீனவர்களை களமிறக்கி எண்ணெய்யை அள்ளும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது” என்றனர் காட்டமாக.
உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபடுவோர் இருந்திடவும், மருத்துவ பரிசோதனைகளை அதிகளவில் நடத்திடுவதும்... எண்ணெய்யை நீர்நிலைகளில் இருந்து அகற்ற சிறந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.எண்ணெய் கசிவு
தமிழ்நாடு அரசின் அறிக்கையின்படி, ``எண்ணெய் அகற்றுவதற்காக ஸ்கிம்மர் எனும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கேற்ப உபகரணங்களை அதிகரிக்கும் திட்டமும் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. அதேபோல் 75 படகுகளுடன் 300 பணியாளர்களும் பணியில் இருக்கிறார்கள் இந்தப் படகுகள், தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து எண்ணெயை உறிஞ்சி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்பரப்பில் இருந்து எண்ணெயை உறிஞ்சுவதற்கு நான்கு கல்லி சக்கர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் எண்ணெய் படிந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது” என்றுள்ளது. அரசு இயந்திரங்கள் பயன்படுத்துவதாக சொல்லப்பட்டாலும் பல இடங்களில் பணியாளர்கள் வாளிகளின் முலம் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றுவதை காண முடிவது சோகம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
கடலெனப் பரவிய எண்ணெய்க் கழிவுகள்... எண்ணூர் முகத்துவாரத்தின் கொடூரக் காட்சிகள் | Shocking Photos
http://dlvr.it/T06fry
Thursday, 14 December 2023
Home »
» எண்ணூர் எண்ணெய்க் கழிவு: அரசின் நடவடிக்கைகளால் மக்கள் காக்கப்படுவார்களா?!