டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண், ஓர் ஆண் போராட்டத்தில் ஈடுபட்டு, உள்ளே பரப்பப்பட்ட வண்ணப் புகையைப் பரப்பினர்.நாடாளுமன்றம்
இறுதியில், நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைக் கைதுசெய்து தனியாக அழைத்துச் சென்று விசாரிக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, இத்தகைய பாதுகாப்பு மீறல் சம்பவத்துக்கு பா.ஜ.க அரசுதான் பொறுப்பு, அவர்கள் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கின. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், `பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தினர்.
அவ்வாறு வலியுறுத்திய எம்.பி-க்களில், 14 எம்.பி-க்கள் மட்டும் அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அன்று நடந்த சம்பவத்துக்கு மக்களவை செயலகம்தான் பொறுப்பு என்றும், எதற்காக அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே கூறியிருக்கிறார்.பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே
நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகத்திடம் பேசிய நிஷிகாந்த் துபே, ``மக்களவையின் பாதுகாப்பு என்பது, மக்களவைச் செயலகத்தின் பொறுப்புதானே தவிர, அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல. அப்படியிருக்க, உள்துறை அமைச்சர் ஏன் இதற்கு பதிலளிக்க வேண்டும்... இன்றைக்கு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், காங்கிராஸ் இன்று அவையைச் செயல்பட விடவில்லை" என்று கூறினார்.
மேலும், நிஷிகாந்த் துபே தனது X சமூக வலைதளப் பக்கத்தில், 1974-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ம் தேதி நாடாளுமன்றத்துக்குள் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் நுழைந்ததாகவும், அப்போதைய பா.ஜ.க, ஜனசங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் அதை அரசியல் பிரச்னையாக்கவில்லை என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.Parliament Breach: 18 மாதங்களாகத் திட்டம்; அவையில் அத்துமீறிய பகத்சிங் ரசிகர் கிளப் - நடந்தது என்ன?
http://dlvr.it/T0CK92
Saturday 16 December 2023
Home »
» Parliament Breach: ``அரசாங்கம் பொறுப்பல்ல... அமித் ஷா ஏன் பதிலளிக்க வேண்டும்?" - பாஜக எம்.பி கேள்வி!