இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக வந்திருந்த இருவர் திடீரென அவைக்குள் குதித்து மஞ்சள் நிற புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் ஆறு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.Parliament - மக்களவை
இன்னொருபக்கம், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இருப்பினும், மோடியும், அமித் ஷாவும் இதுவரை இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை. மாறாக, பா.ஜ.க அரசு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி-க்களில், 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், மக்களவையின் பாதுகாப்பு என்பது மக்களவை செயலகத்தின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பல்ல என்று பா.ஜ.க கூறிவருகிறது. இந்த நிலையில், மக்களவையில் நடந்த பாதுகாப்பு மீறல் தீவிரமான விஷயம் என்றும், தேவையில்லாத சர்ச்சையை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தற்போது தெரிவித்திருக்கிறார்.மோடி
மக்களவை பாதுகாப்பு மீறல் குறித்து, டைனிக் ஜாக்ரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில், ``மக்களவையில் நடந்த சம்பவத்தின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சபாநாயகர் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருகிறார். புலனாய்வு அமைப்புகளும் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன. இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் கூறுகள் என்ன, அவற்றின் நோக்கங்கள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதும், அதற்குத் தீர்வு காண்பதும் மிக முக்கியம். எனவே, இதில் தேவையில்லாத சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் அனைவரும் தவிர்க்க வேண்டும்" என்று மோடி கூறியிருக்கிறார்.2 லட்சம் பெண்கள்... மோடி கூட்டத்தில் அதிரடி காட்டத் தயாராகும் கேரள பாஜக! - பின்னணி என்ன?
http://dlvr.it/T0Fl9v
Sunday, 17 December 2023
Home »
» Parliament Security Breach: ``மிகவும் தீவிரமானது... தேவையில்லாத சர்ச்சை வேண்டாம்!" - பிரதமர் மோடி