தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. மழை டிப்ஸ்
இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/T0CVSF
Saturday 16 December 2023
Home »
» Tamil News Today Live: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!