ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ!
சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்புப் பணியில் இருந்த கிண்டி போலீஸாரும், போக்குவரத்து போலீஸாரும் ரெளடி கருக்கா வினோத்தை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். இதற்கிடையே என்ஐஏ அமைப்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தது. இந்த நிலையில் கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது, குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த காவலர் ஒருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அன்று என்ன நடந்தது எனக் காவலரிடம் வாக்குமூலம் பெற என்.ஐ.ஏ திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ரௌடி கருக்கா வினோத்
இதற்கிடையே, ரெளடி கருக்கா வினோத்தை ஐந்து நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
http://dlvr.it/Szw7hn
Saturday 9 December 2023
Home »
» Tamil News Today Live: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு: ரெளடி கருக்கா வினோத்தைக் காவலில் எடுக்க என்.ஐ.ஏ மனு!