விஜயகாந்த் வீட்டுக்குத் திரும்பினார்..!
Vijayakanth |விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தன. அப்போது அவரின் மனைவி பிரேமலதா அதை மறுத்து வந்தார். மேலும் அவர் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்களையும் பகிர்ந்து நம்பிக்கையளித்தார். இந்த நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.
http://dlvr.it/Szz7w2
Monday, 11 December 2023
Home »
» Tamil News Today Live: `விஜயகாந்த் பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்..!’ - மருத்துவமனை அறிக்கை