உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், குஜராத், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை தமிழ்நாட்டைவிட அதிகம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மாநிலங்களிடையேயான முதலீட்டு நிலவரங்களை ஒப்பிடுவது சரியா.. அதனை வைத்து வளர்ச்சியை கணிப்பது சரியா என்ற கேள்விக்கு பதில் தேடினோம். முதலீட்டாளர் மாநாடு
ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.6.6 லட்சம் கோடி வரை முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகும்தான் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. தமிழக பொருளாதாரம் அதிவிரைவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனப் பெருமிதம் கொண்டார் முதல்வர்.
இதற்கிடையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி முதலீடுகளை எதிர்பார்த்தோம், தமிழக அரசு சரியாக இலக்குடன் பயணிக்க வேண்டும்.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின்னர்தான் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீது நம்பிக்கை அதிகரித்து, முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்” எனப் பேசியதோடு, `உத்திரபிரதேசத்தில் ரூ.33 லட்சம் கோடி முதலீடாக ஈர்க்கப்பட்டிருக்கிறது... குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பே ரூ.10 லட்சம் கோடியை நோக்கி முதலீடுகள் சென்றுகொண்டிருக்கின்றன’ என தமிழ்நாட்டு முதலீட்டோடு பூடமாக ஒப்பிட்டு பேசினார். அதோடு 6.6 லட்சம் கோடி முதலீட்டுக்காக தி.மு.க பெருமை பேசிக் கொள்ள எதுவுமில்லை என்றும் தாக்கினார் அண்ணாமலை.அண்ணாமலை
நம்மிடம் பேசிய அரசியல் விபரமறிந்தவர்கள், ``உலக முதலீட்டாளர்கள் மாநாடு தி.மு.க அரசுக்கு நன்மதிப்பை பெற்றுதந்துள்ளது. பொருளாதார நிபுணர்களும் தொழில் அதிபர்களும் அரசை பாராட்டியுள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு பா.ஜ.க இதிலும் அரசியல் அஸ்திரத்தை கையிலெடுக்கிறது. முதலீட்டுக்கு காரணமே மோடிதான் என்றும், இதென்ன பெரிய முதலீட்டு உத்திரபிரதேசத்தை பாருங்கள், குஜராத்தை பாருங்கள் எனக்கூறி, அதனை ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் மிகக் குறைவுதான் என கருத்துருவாக்கம் செய்துவருகிறார்கள்” என்றனர்.
இந்த ஒப்பீட்டை எப்படி பார்ப்பது. இது சரியானது தானா? என மூத்த பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்... ``இதர மாநிலங்களின் முதலீடுகளை ஒப்பிடுவதே முதலில் தவறு. அந்ததந்த மாநிலத் தேவைக்கேற்ப முதலீட்டு திட்டங்களை மாநில அரசுகள் வரவேற்கும். தமிழ்நாட்டில் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் ஏற்கனவே தேவைக்கேற்ப இருந்தால் மீண்டும் மீண்டும் கார் நிறுவன தொழிற்சாலைகளை புதியதாக ஈர்க்கப் போவதில்லை, ஆனால் கார் தொழிற்சாலைகளே இல்லாத மாநிலங்கள் அதிகளவில் அதனை ஈர்க்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்று பொருளாகாது. சொல்லப்போனால் ஓருவர் வீட்டில் இரண்டாவது கார் வாங்குகிறார். அதன் மதிப்பு 6 லட்சம், மற்றொருவர் 7 லட்சத்துக்கு முதன்முறையாக ஒரு கார் வாங்குகிறார் என்றால் இதில் வளர்ச்சியடைந்தவர் யார் என நீங்களே கண்க்கீடு செய்யலாம்.பிரதமர் மோடி
மேலும் ஒரு நிறுவனம் தொடங்கும் முன், மாநில அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதன் அம்சங்களை பொறுத்தும் முதலீடுகள் வரும். எடுத்துக்காட்டாக, மாநில தொழிலாளர் நலன், சூழலியல் நலன் கருதி புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நிபந்தனைகளை மாநில அரசு முன்வைக்கும், தமிழ்நாடு பொருளாதாரம்
ஒருவேளை சில மாநிலங்களில் நிபந்தனைகளே இல்லையென்றாலும், அங்கே எளிதாக தொழில்தொடங்கலாம் என அங்கே செல்லும் வாய்ப்புகள் உண்டு. அது பல நேரங்களில் சுற்றுசூழல் சிக்கல்களை கொண்டு வந்து விடுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களை ஈர்ப்பதைவிட பலன் தரக்கூடியவை எவை என்பதை கணக்கில் கொண்டுள்ளார்கள். குறிப்பாக எவ்வளவு தொகை முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது என்பதைவிட தனிமனித வருமானம், மாநிலத்தின் வர்த்தக வளர்ச்சி உள்ளிட்டவற்றை வைத்துதான் வளர்ச்சியை கணக்கிட வேண்டுமே தவிர முதலீட்டு தொகையை வைத்து அல்ல” என்றார்கள் விளக்கமாக!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`தமிழ்நாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடு’ யார் காரணம்... மோடியா, ஸ்டாலினா?!
http://dlvr.it/T1HpLK
Friday, 12 January 2024
Home »
» தமிழ்நாடு ரூ.6.6 லட்சம் கோடி... உ.பி ரூ.33 லட்சம் கோடி..! - முதலீடுகளை ஒப்பிடுவது சரியா?!