இன்று அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ராமர் கட்டப்பட்டு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, 1990-ல் பா.ஜ.க தலைவர் அத்வானி (96) முன்னெடுத்த ரத யாத்திரை. தேசிய அளவில் அத்வானி மேற்கொண்ட இந்த ரத யாத்திரையின்போது, வட இந்தியாவின் பல பகுதிகளில் வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறியது. இறுதியாக, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உட்பட முக்கிய வலதுசாரி தலைவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.அத்வானி ரத யாத்திரை
பின்னர், 2019-ல் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அன்று முதல் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழா காண்கிறது. வயது முதிர்வு காரணமாக அத்வானி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், திறப்பு விழாவில் அத்வானி பங்கேற்பர் என்றும், அவருக்கு சிரமம் ஏற்படாத வகையில் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடந்த வியாழனன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஷ்ட்ர தர்மா என்ற பத்திரிகைக்கு `ராமர் கோயில்; புனிதமான கனவை நிறைவேற்றுதல்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை அத்வானி எழுதியிருக்கிறார். ஜனவரி 16-ம் தேதி ராஷ்ட்ர தர்மா பத்திரிகையில் வெளியாகவிருக்கும் அந்தக் கட்டுரையில், ``1990-ல், செப்டம்பர் 25-ம் தேதி காலையில் நாங்கள் ரத யாத்திரையைத் தொடங்கியபோது, ராமர் மீதான நம்பிக்கை நாட்டில் ஒரு இயக்கமாக உருவெடுக்கும் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. இருப்பினும், அயோத்தியில் ஒரு நாள் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்று விதி முடிவு செய்திருப்பதாக அந்த சமயத்தில் நான் உணர்ந்தேன்.அத்வானி - மோடி
அதோடு, யாத்திரை தொடங்கிய சில நாள்களிலேயே இதில், நான் ஒரு தேரோட்டி மட்டுமே என்பதையும் உணர்ந்தேன். இதில் முக்கிய செய்தியே யாத்திரைதான். அந்தத் தேர் வழிபாட்டுக்குரியது. ஏனெனில் அது ராமர் பிறந்த இடத்துக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த யாத்திரைதான் என்னுடைய அரசியல் பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வு. அதுவே, இந்தியாவையும் என்னையும் மீண்டும் கண்டுபிடிக்க எனக்கு வாய்ப்பளித்தது.
யாத்திரையின்போது, என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பல அனுபவங்கள் இருக்கின்றன. தொலைதூர கிராமங்களிலிருந்து, தெரியாத மக்கள் பலர், தேரைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்குடன் என்னிடம் வந்து, ராம் என்று கோஷமிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அதன் செய்தியென்னவென்றால், ராமர் கோயில் என்பது பலரின் கனவு. பின்னர், அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ராமர் தன்னுடைய பக்தரான மோடியைத் தேர்ந்தெடுத்தார்.அத்வானி, வாஜ்பாய்
திறப்பு விழா அன்று, கோயிலில் ராமர் சிலையைப் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்துவார். இருப்பினும், இந்தத் தருணத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லாதது வருத்தமளிக்கிறது. அரசியலிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக அவர் இருந்தார்" என்று அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk'அயோத்தி ராமர் கோயில் விழா' - அன்று முன்னெடுத்த பாஜக தலைவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?!
http://dlvr.it/T1McC5
Sunday, 14 January 2024
Home »
» Ayodhya Temple: `இந்த தருணத்தில் வாஜ்பாய் இல்லாதது வருத்தமளிக்கிறது!'- ராமர் கோயில் குறித்து அத்வானி