தமிழ்நாட்டை ஆண்ட அ.தி.மு.க., ஆளும் தி.மு.க-வை பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியைவிட வேறு யாரும் இந்த அளவுக்கு விமர்சனம் செய்திருக்க மாட்டார்கள். அதேநேரத்தில், அந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணியும் அமைத்து, பலனும் அடைந்திருக்கிறது பா.ம.க.அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 23 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து நடந்த ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்றது. தற்போது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்த நிலையில், 'தேசிய அளவில் பா.ஜ.க-வுடன் கூட்டணி... தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணி இல்லை' என்று புது விளக்கம் கொடுத்து அரசியல் செய்கிறது பா.ம.க. ஆனால், பா.ம.க கூட்டணியில் இருப்பதாகவோ, இல்லை என்றோ பா.ஜ.க இதுவரை அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் வரையில் ஒரு முடிவிலிருக்கும் பா.ம.க., தேர்தல் நெருங்கும்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட வரலாறு இருக்கிறது. அப்படி நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ம.க யார் பக்கம் சாயப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இது குறித்து அந்தக் கட்சியின் சீனியர் நிர்வாகிகளுடன் பேசினோம். ``கட்சி நிர்வாகம், தேர்தல், கூட்டணி என எல்லா முடிவுகளையும் ஐயா ராமதாஸ்தான் எடுப்பது வழக்கம். தற்போது அன்புமணியும் சில முடிவுகளை எடுக்கிறார். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு 2021-ல்தான் பா.ம.க பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறோம். இதற்கும், அன்புமணி ராஜ்ய சபா எம்.பி-யாக இருப்பதற்கும் காரணம் அ.தி.மு.க-தான். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் உச்சபட்ச வாக்கு (22,97,431) எண்ணிக்கையைப் பெற்றுத் தந்தது அதிமுக கூட்டணிதான். எனவே, அ.தி.மு.க கூட்டணியிலேயே தேர்தலைச் சந்திக்கலாம் என்பது ஒரு தரப்பின் கருத்தாக இருக்கிறது.ராமதாஸ் - அன்புமணி
'பா.ம.க வலுவிழக்கக் காரணமாக இருப்பது பா.ஜ.க-தான். நமது கட்சி நிர்வாகிகளை அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள்' என ராமதாஸ் அவர்களே பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இதனால், பா.ஜ.க-வுடன் செல்ல பலருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், பா.ம.க-வுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கொடுத்து ஏ.கே.மூர்த்தி, பொன்னுசாமி, என்.டி.சண்முகம் ஆகியோரை மத்திய அமைச்சரவையில் அமரவைத்தது பா.ஜ.க-தான். எனவே, வரும் தேர்தலில் பா.ஜ.க-வுடன் போட்டியிட்டால், வெற்றி பெறாவிட்டாலும், ராஜ்ய சபா எம்.பி மூலமாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுவிடலாம் என்பது இன்னோரு தரப்பின் கருத்தாக இருக்கிறது.
அதேநேரத்தில், தி.மு.க-வுடன் கூட்டணியில் இணைந்தால், எம்.பி ஆவது உறுதி. இதுதான் கட்சியின் தற்போதைய நிலைமையைச் சரிசெய்ய உதவும் என்றும் தலைமை நினைக்கிறது. இவற்றை மனதில் வைத்துத்தான் ஆளும் தி.மு.க அரசையும், மத்திய பா.ஜ.க அரசையும் வலுவாக எதிர்க்காமல், பெயரளவில் விமர்சனம் செய்து தலைமை கடந்துபோகிறது.அன்புமணி - மோடி
அ.தி.மு.க அல்லது பா.ஜ.க-வுடன் இணைந்தால் அதிக அளவில் சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க-வுடன் இணைந்தால் சீட் குறைவாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. தற்போது யாருடன் கூட்டணிக்குச் செல்லலாம் என்ற குழப்ப மனநிலையில் பா.ம.க-வும் இருக்கிறது" என்றனர் விரிவாக.
மறுபக்கம் பா.ம.க-வைச் சேர்த்துக்கொண்டால், தற்போதைய கூட்டணி சிதைய வாய்ப்பு இருப்பதாக தி.மு.க தலைமை கருதுவதாலேயே பாமக குறித்துப் பேசுவதைத் தவிர்த்துவருகிறது. ஆனால், பா.ம.க-வைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அ.தி.மு.க கடுமையாக முயற்சி செய்கிறது. திரை மறைவில் பேச்சுவார்த்தையும் நடத்துகிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசும்போது, "அம்மா மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் 18 எம்.எல்.ஏ-க்களை இழுத்துச் சென்றதால், எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ம.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான், வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது.
பா.ம.க-வைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தால், அது தென்மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தென்மாவட்ட நிர்வாகிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியில் பா.ம.க-வுக்கு செல்வாக்கு இருப்பதால்தான், தனிப்பட்ட முறையில் பா.ம.க-வை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரமாக முயல்கிறார் எடப்பாடி. பெரியவர் கிரீன் சிக்னல் போட்டால், சின்னவர் ரெட் சிக்னல் போடுகிறார்.ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி
தற்போதைய நிலைமையில் பா.ம.க., அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்தால் ஒரு வகையில் லாபம் இருப்பதுபோல, தி.மு.க கூட்டணிக்குச் சென்றால் இன்னோரு வழியாக லாபம் இருக்கிறது. அதாவது, பா.ம.க., தி.மு.க பக்கம் சென்றால், அங்கிருக்கும் வி.சி.க நிச்சயமாக வெளியே வரும். அவர்களை எங்கள் கூட்டணிக்குள் இணைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்" என்றார் பெருமூச்சுடன்.
தேர்தல் நெருங்க நெருங்க அடுத்தகட்ட நகர்வுகள் தெரியவரும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T1FK2m
Thursday, 11 January 2024
Home »
» பாமக சாயப்போகும் கூட்டணி எது? - அன்புமணி அரசியலும் அறிகுறிகளும்!