கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த மகேஷ் உள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார் மகேஷ். மேயர் மகேஷுக்கும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கோஷ்டி மோதல் இருந்துவருகிறது. மனோ தங்கராஜின் ஆதரவாளரான துணை மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் சில கவுன்சிலர்கள், மேயர் மகேஷுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தி.மு.க கவுன்சிலர்களுடன் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44-வது வார்டு கவுன்சிலர் நவீன்குமாரும் மேயருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். கவுன்சிலர் நவீன் குமார் காங்கிரஸ் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் மேயர் தனது காரில் அமர்ந்தபடி, ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேயரின் காரில் மோதுவது போன்று ஒரு கார் வந்துள்ளது. அந்த கார் யாருடையது என பார்க்க மேயரின் தபேதார் மணிகண்டன் சென்றிருக்கிறார்.காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார்
அந்த காரில் காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார் இருந்துள்ளார். மேயரின் காரில் மோதுவது போன்று வந்தது பற்றி தபேதார் மணிகண்டன் கேட்டுள்ளார். அதற்கு, நவீன்குமார் அசிங்கமாக திட்டியதுடன் தபேதாரையும், மேயரையும் `கார் ஏற்றி கொலை செய்துவிடுவேன்' என மிரட்டியதுடன், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மேயரின் தபேதார் மணிகண்டன், நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நவீன்குமார் மீது வழக்கு பதிந்த போலீஸார் அவரை தேடி வருகின்றனர். நவீன்குமார் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்
இது குறித்து போலீஸார் கூறுகையில், "அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நவீன்குமார் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறோம். தலைமறைவாக உள்ள கவுன்சிலர் நவீன்குமாரை தேடி வருகிறோம்" என்றனர். காங்கிரஸ் மேயரை நான்கு மணி நேரம் சிறைப்பிடித்த திமுக துணை மேயர் - கும்பகோணம் மாநகராட்சி பரபரப்பு!
http://dlvr.it/T1M00J
Sunday, 14 January 2024
Home »
» திமுக மேயரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக வழக்கு பதிவு; காங்கிரஸ் கவுன்சிலர் தலைமறைவு - என்ன நடந்தது?