நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில், 2020-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டும்தான் பிரதான கட்சிகளாகச் செயல்பட்டுவருகின்றன. தற்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. அதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.டொனால்டு ட்ரம்ப்
இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி (37)-யும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கானப் பணிகளையும் மும்முரமாகத் தொடர்ந்தார். இதற்கிடையில், ட்ரம்ப் தனது `ட்ரூத்' சோஷியலில், விவேக் ராமசாமியை `மோசடியாளர்' எனச் சாடினார். மேலும், `இந்திய-அமெரிக்கருக்கு அளிக்கப்படும் வாக்கு, எதிர் தரப்புக்கு அளிக்கப்படும் வாக்கு' என கருத்து தெரிவித்தார்.
அந்தச் சூழலில், அயோவா, காக்கஸ் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் அதிக சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆனால், விவேக் ராமசாமி 7.7 சதவிகித வாக்குகளைப் பெற்று 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான், அதிபர் தேர்தலிலிருந்து பின்வாங்குவதாக விவேக் ராமசாமி அறிவித்திருக்கிறார்.விவேக் ராமசாமி
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், ``நான் எனது இலக்கை அடையவில்லை. வெள்ளை மாளிகையில் எங்களுக்கு ஓர் அமெரிக்க தேசபக்தர் தேவை. மக்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்று சத்தமாகவும் தெளிவாகவும் பேசுகிறார்கள். எனவே, நான் எனது பிரசாரத்தை இடைநிறுத்துகிறேன். மேலும், டொனால்டு ட்ரம்ப்பை ஆதரிக்கிறேன். அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.`குழந்தையை பராமரிக்க 80 லட்சம் சம்பளம்' விவேக் ராமசாமி வீட்டில் குவியும் விண்ணப்பம்..!
http://dlvr.it/T1S2QD
Tuesday, 16 January 2024
Home »
» அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னேறும் ட்ரம்ப்; பின்வாங்கிய விவேக் ராமசாமி - காரணம் என்ன?!