வரும் மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் இப்போது அவசர அவசரமாக ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. எதிர்க்கட்சிகளும் தொகுதிப்பங்கீடு செய்து கொள்ள முயன்று வருகிறது. ஆனால் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாக இருந்து வருகிறது. நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்க்கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் அளித்த பேட்டியில் பா.ஜ.க. இம்முறையும் தனிப்பெரும் கட்சியாக வரும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வரும். ஆனால் பா.ஜ.க.கூட்டணியில் இடம் பெற்ற சில கூட்டணி கட்சிகள் இப்போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க மறுத்து இருப்பதால் பா.ஜ.க.வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சிகள் அவர்களுடன் சேர தயாராக இல்லை. அந்த கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்கலாம். எனவே நாங்களும் முயற்சி செய்து பார்ப்போம். எதிர்க்கட்சி கூட்டணியில் சுமூகமாக தொகுதி பங்கீடு ஏற்படும் என்று நம்புகிறேன்.
தோல்வியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படும் போது பா.ஜ.க-வுக்கு எதிராக ஒரே வேட்பாளரை நிறுத்த முடியும். மற்ற மாநிலத்தில் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர் இருக்கலாம். வாக்காளர்கள் தாங்கள் சிறந்த வேட்பாளராக கருதும் நபரை தேர்ந்தெடுப்பார்கள். அது ஒன்றுதான் வாக்காளர்களால் செய்யக்கூடிய ஒன்றாகும். இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் பா.ஜ.க.வேட்பாளர் வெற்றி பெறலாம். தமிழ்நாடு மற்றும் கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள்.
கேரளாவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆகும். ஆனால் அதன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரே அணியில் இடம் பெற்று இருக்கிறது. அவர்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் போட்டியிடுவார்கள். எனவே மக்களுக்கு நினைவூட்டுவது என்னவென்றால் உங்களது தொகுதியில் சிறந்தவர்களுக்கு வாக்களிப்பதுதான். சசிதரூர்
மோடி மோடி என்று கோஷமிடுபவர்கள் மோடியை வாரணாசி மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தொகுதியில் சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். மோடியை அனுப்புவதற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அது அவர்களது விருப்பம்'' என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T1TpRf
Wednesday, 17 January 2024
Home »
» ``வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும்” - சசி தரூர் சொல்வதென்ன?