கடந்த ஆண்டு மே மாதம் குக்கீ - மெய்தி என இரு இனங்களுக்கு இடையே தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர். நாள்கள், மாதங்களாக கடந்த பின்னரும் முழுமையான அமைதிக்கு இன்னும் மணிப்பூர் திரும்பவில்லை.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 110 கிமீ தொலைவில் உள்ள மோரே நகரத்தில், இன்று மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் மணிப்பூர் காவல்துறை கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே காலை முதல் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மணிப்பூர்!
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, மோரே அருகே உள்ள பாதுகாப்புச் சாவடி மீது மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டனர். மோரே இந்தியா - மியான்மர் எல்லையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக நகரமாகும். தற்காலிக கமாண்டோ முகாம் மீது மர்ம நபர்கள் ஆர்பிஜி எனப்படும் கையெறி குண்டுகளை வீசியதாகவும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். வன்முறையில் கொல்லப்பட்ட கமாண்டோ, மோரேயில் உள்ள மாநில போலீஸ் கமாண்டோவில் பணிபுரிந்து வந்த வாங்கெம் சோமோர்ஜித் என தெரிய வந்துள்ளது. இவர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள மாலோம் பகுதியைச் சேர்ந்தவர்.
காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, பொது அமைதிக்கு இடையூறு மற்றும் மனித உயிர்கள், உடைமைகளுக்கு ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜனவரி 16-ம் தேதி காலை 12 மணி முதல் மணிப்பூர் அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
Today (17.01.2024) at early morning, armed militants orchestrated a violent attack on the State forces, employing firearms and explosives in Moreh, Tengnoupal district. In the incident, one personnel of 6th Manipur Rifles namely Wangkhem Somorjit Meetei S/o (L) W. Chaoton Singh…— Manipur Police (@manipur_police) January 17, 2024
இதனிடையே குக்கி பழங்குடியினர் மோரேவில் இருந்து மாநில காவல்துறையை அகற்றிவிட்டு மத்தியப் படைகளை மட்டும் வைத்திருக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டனர். குக்கி இன மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மணிப்பூர் காவல்துறை மறுத்துள்ளது. மேலும் மாநில காவல்துறை கமாண்டோக்களை தாக்கியவர்கள் மலை பகுதி கிளர்ச்சியாளர்கள் என்று கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T1VY2L
Wednesday, 17 January 2024
Home »
» மணிப்பூரில் மீண்டும் பதற்றம்... மர்ம நபர்களின் தாக்குதலில் கமாண்டோ ஒருவர் பலி - தொடரும் சோகம்