அரசியல் களத்தில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் சந்தித்த அனைத்து தேர்தலிலும், அ.தி.மு.க-வுக்குத் தோல்வியே மிஞ்சியது. அதே சமயம் பா.ஜ.க தமிழ்நாட்டில் `கொஞ்சம்' வளர்ச்சியைச் சந்தித்தது. இது இரண்டு கட்சித் தலைவர்கள் இடையே பெரும் மோதலை உருவாக்கியது. குறிப்பாக அ.தி.மு.க-வின் தலைவர்கள், தங்கள் தோல்விக்கு பா.ஜ.க-தான் காரணம். அவர்களோடு ஏன் கூட்டணியில் தொடர வேண்டும் எனத் தொடர்ச்சியாகத் தலைமையைக் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தனர். மற்றொரு புறம் பா.ஜ.க மாநிலத் தலைமை, அ.தி.மு.க தலைவர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டே வந்ததது. ஒருகட்டத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களின் நெருக்கடி, அ.தி.மு.க முன்னாள் தலைவர்கள்மீதான விமர்சனங்கள் அதிகரிக்க, “பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை” என்ற முடிவை அறிவித்தது அ.தி.மு.க தலைமை. ஆனாலும், ``இந்த அறிவிப்பு போலியானது, நாடகம். தேர்தல் நேரத்தில் இருவரும் இணைந்துகொள்வார்கள்" என்ற பேச்சு எழ, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் தெளிவாக இருப்பதாக சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததோடு, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்கவும் மறுத்துவிட்டார். இதெல்லாம் டெல்லி தலைமையை டென்ஷன் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள் கமலாலயத்தில்...அண்ணாமலை, ஓ.பி.எஸ், எடப்பாடி
கூட்டணி வேண்டாம் என்பதில் எடப்பாடி எடுத்திருக்கும் முடிவால் டெல்லி தரப்பிலிருந்து அவருக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். அதற்காகத்தான் ஓ.பி.எஸ் உடன் பிரதமர் மோடி சந்தித்திருக்கிறார், என்கிறார்கள். அப்படியானால், ஓ.பி.எஸ்-ஐ வைத்து எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி தரப்பு முயல்கிறதா என்ற கேள்வியோடு கமலாலயத்தை வலம் வந்தோம்...
“பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அறிவித்தது தற்காலிகமானது என்றுதான் டெல்லி தலைமை நினைத்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு எங்களுக்கு எந்தளவு அ.தி.மு.க தேவையோ அதே அளவு அவர்களுக்கும் எங்கள் தேவை இருக்கிறது” எனப் பேசத் தொடங்கியவர்கள்... “எடப்பாடியே மீண்டும் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை எனச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்ட டெல்லி தலைமை கடும் அப்செட் ஆகிவிட்டது. ஏனெனில் அ.தி.மு.க கூட்டணியை மீட்டெடுக்க டெல்லியில் சில விவகாரங்கள் பேசப்பட்டன. அது அ.தி.மு.க எதிர்பார்த்த முடிவும்கூட. ஆனால், அ.தி.மு.க இப்படிப் பேசிக்கொண்டிருப்பதால் அவர்கள் மீண்டும் எங்களுடன் கூட்டணியில் இருக்க வாய்ப்பில்லை என டெல்லி முடிவு செய்துவிட்டது. எனவே, நாங்கள் எங்களுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்டோம்” என்றவர்களிடம்...மோடி, எடப்பாடி பழனிசாமி
“அதற்காகத்தான் ஓ.பி.எஸ் மூலமாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கிறீர்களா?” எனக் கேட்க, ``அப்படி எதுவும் திட்டம் இல்லை” என முடித்துக்கொண்டனர். `எடப்பாடி குறித்த அந்த ரகசியம்; தெரியப்படுத்த வேண்டியவரிடம் தெரிவிப்பேன்..!' - ஓ.பி.எஸ் `பளீர்'
எடப்பாடி தரப்பிலோ, “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களுடனேயே இருப்போம் என நினைத்துவிட்டார்கள்போல. ஆனால், அதெல்லாம் டெல்லிக்கும் கூட்டணி தர்மத்துக்கும் நாங்கள் கொடுத்த மரியாதைதானே தவிர, தனி நபருக்கு கொடுத்த மரியாதை இல்லை. ஓ.பி.எஸ் மூலமாக எங்களுக்கு பா.ஜ.க, செக் வைக்கவே நினைக்கும். அதனால்தான் எடப்பாடி பற்றி ஓ.பி.எஸ்-ஐப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். அவரும் எடப்பாடி திகார் செல்வது உறுதி எனப் பேசுவது மட்டுமல்லாமல், தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, பொதுக்குழு தொடர்பான வழக்குகள், பிரதமரிடம் ஏதோ ஃபைலைக் கொடுத்துவிட்டு, அதை எடப்பாடிக்காகக் கொடுத்தேன் என்பதுபோல பேசுவது, எனத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஓ.பி.எஸ் மூலம் மட்டுமல்ல, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்வதற்காக ஜன.,30 மற்றும் 31-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன்மூலம், நீதிமன்றங்கள் மூலமும் நெருக்கடி கொடுக்கத் தயாராகிறார்களோ என்ற எண்ணம் உருவாகிறது” என்றனர். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
”எது கள எதார்த்தமோ அதைச் சொல்கிறோம். எடப்பாடியின் வரலாறு அப்படி. எனவே, நாங்கள் சொல்வதால் அவர் சிறைக்குச் செல்வார் என்று பொருளில்லை. சசிகலா, தினகரனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்-க்கும் கட்சித் தொண்டர்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். அதற்கான பலனை அவர் அனுபவிப்பார்” என்கிறார்கள் ஓ.பி.எஸ் தரப்பினர்... தேர்தல் நெருங்க... நெருங்க... இந்த அரசியல் ஆட்டத்தில் இன்னும் சூடு கிளம்பும்... என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEkகொடநாடு வழக்கு: `எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும்!' - உயர் நீதிமன்றம் உத்தரவு
http://dlvr.it/T13vBR
Sunday, 7 January 2024
Home »
» ஓ.பி.எஸ்-ஐ வைத்து எடப்பாடிக்கு லாக்? - டெல்லி மேலிடத்தின் `மூவ்' என்ன?