தி.மு.க கூட்டணியில் இருக்கும் வேல்முருகன், பண்ருட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். ஆனால், திமுக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் வேல்முருகன். உதாரணமாக, வேங்கைவயல் விவகாரம் உள்ளிட்டவையில் தமிழக அரசின் முடிவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். வேல்முருகன் - ஸ்டாலின்
அதேபோல, இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் சட்டங்கள் இயற்றுவதில் மத்திய நாடாளுமன்றம் போலத்தான் தமிழ்நாடு சட்டமன்றமும் செயல்படுகிறது என்று விமர்சனம் செய்த வேல்முருகன், நீட் விவகாரத்தில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்று கடுமையாகவே விமர்சனம் செய்திருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய தென் மண்டல ஐஜி சைலேஷ் யாதவ்-க்கு டி.ஜி.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்ட்ட விவகாரத்துக்கு திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார் வேல்முருகன்.
குறிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கோட்டையை நோக்கி மாபெரும் போராட்டம் நடத்தபோவதாகவும் அறிவித்து இருக்கிறார் வேல்முருகன்.த.வா.க பொதுக்குழு
இப்படி சமீப காலமாக தி.மு.க அரசு மீது விமர்சனம் செய்துவரும் வேல்முருகன், தனது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தி சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடத்தி இருந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்க சேலம் சென்றிருந்த வேல்முருகனிடம் அ.தி.மு.க-வின் முக்கிய புள்ளிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் சீனியர் புள்ளியிடம் பேசினோம். "தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டவர். அதனால்தான், கூட்டணியில் இருந்தாலும்கூட தி.மு.க-வின் அடாவடிகளை தைரியமாக தட்டி கேட்கிறார்.
தற்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிந்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க, தமிழக நலன் என்ற மையக்கருத்தை வைத்துதான், வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. எனவே, தமிழக நலன் என்ற ஒற்றை புள்ளியில் அ.தி.மு.க.வும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் இணைகிறது. எனவே, கூட்டணி குறித்து சேலத்தில் வைத்து வேல்முருகனை எங்கள் கட்சியின் முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசிவைத்தார் எடப்பாடி. அப்போது, "தற்போது திமுக அரசின் விவகாரங்களை கூட்டணி என்ற தடைக்குள் தயக்கமாக பேசுகிறீர்கள். நீங்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தால், அதை வெளிப்படையாக இன்னும் காட்டமாக தட்டிகேட்கலாம். அதற்கு அ.தி.மு.க துணை நிற்கும்' என்று பேசப்பட்டிருக்கிறது.
அதேபோல, ' நீங்கள் கேட்ட சீட்டை மக்களவைத் தேர்தலில் திமுக தராது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேச்சுவார்த்தை மூலம் சீட் பங்கீடு செய்யலாம். நம்ம பக்கம் வந்துடுங்க'." என்று தலைமை சார்பாக பேசப்பட்டு இருக்கிறது. இதை பொறுமையாக கேட்ட வேல்முருகன், `சீட் கொடுக்கவில்லை என்பதற்காக கூட்டணி மாறினால் நன்றாக இருக்காது. நல்ல முடிவு எடுக்கிறேன்’ என சொல்லி அனுப்பி வைத்து இருக்கிறாராம். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்திருக்கிறது" என்றார் விரிவாக.வேல்முருகன்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட் கேட்ட வேல்முருகனுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில்தான் ஒரு சீட் வழங்கியது தி.மு.க. தற்போதும் ஒரு நாடாளுமன்ற தொகுதியை வேல்முருகன் கேட்டு வருகிறார். ஆனால், அவருக்கு ஒரு சீட் கொடுக்கும் மனநிலையில் தி.மு.க இல்லை காரணம், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக என கூட்டணி பட்டியல் நீள்கிறது. கமல்ஹாசனின் மநீம-வும் சீட் எதிர்பார்க்கிறது. இதனை உணர்ந்த அதிமுக, வேல்முருகனை தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறது. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/T18HHw
Tuesday, 9 January 2024
Home »
» தொடர்ந்து திமுக அரசை எதிர்க்கும் வேல்முருகன்... அதிமுகவுடன் சேலத்தில் பேச்சுவார்த்தையா?!