இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!' என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி என மறுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், இது வெறும் வதந்திதானா... அல்லது இதன் பின்னணியில் வேறு வியூகங்கள் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு பதில் தேடினோம்!
ஜனவரி முதல் வாரத்திலிருந்தே உதயநிதி முதலமைச்சாராகப் போகிறார் என்ற தகவல்கள், அரசு வட்டாரங்களிலிருந்து கசிய தொடங்கின. குறிப்பாக ஜனவரி 11-ம் தேதி முதல் செய்தி ஊடகங்களும் சமூக வலைதளங்களிலும் உதயநிதி துணை முதலமைச்சராகிறார் என்ற செய்திகள் பரவின. பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ``ஆம், எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குக்கு துணையாக இருப்போம்” என்ற உதயநிதியின் பதில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து, ``தி.மு.க-வில் உதயநிதியை விட்டால் வேறு யாரும் இல்லையா... தி.மு.க என்ன கருணாநிதியின் சொத்தா..?'' என கடும் விமர்சனங்கள் கிளம்பின.
இதற்கிடையில் ஜனவரி 13-ம் தேதி பொங்கல் வாழ்த்துமடலை வெளியிட்டார் தமிழ்நாட்டு முதலமைச்சர். அதில், ``வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி, வாழ்க்கை நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள் என் உடல்நிலை குறித்து பொய் தகவல்களைப் பரப்பினர். அது நொறுங்கிப் போகவே... அடுத்த வதந்தியாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர்” எனக் குறிப்பிட்டது பெரும் திருப்பமாக அமைந்தது. உதயநிதி, ஸ்டாலின்
இதெல்லாம் ஒருவகை வியூகம் என பேசத் தொடங்கிய பா.ஜ.க-வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``தி.மு.க என்பது கருணாநிதியின் குடும்ப சொத்து. அதில் குடும்பத்தினர் மட்டுமே உயர் பதவிகளுக்கு வரமுடியும். உதயநிதி, துணை முதலமைச்சர் என்பது அதிகாரபூர்வமாகப் பதவி பிரமாணம் மட்டும்தான் செய்யப்படவில்லை. மற்றபடி முதலமைச்சரைவிட அதிகமான அதிகாரம் உதயநிதியிடம்தான் இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி பற்றி பல்வேறு கருத்துகளைக் கூறிவிட்டு, பின்பு அவரே மறுத்தார். உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என்றார், ஆனால் வந்துவிட்டார். உதயநிதி அமைச்சராக மாட்டார் என்றார், ஆனால் ஆகிவிட்டார். `மாநிலத்தில் இருமொழி கொள்கைதான்; அண்ணாமலையின் பகல் கனவு பலிக்காது..!' - தமிழ்நாடு அரசு பதில்பி.ஜே.பி எஸ்.ஆர்.சேகர்
அதேபோல் துணை முதலமைச்சர் வதந்தி என்றிருக்கிறார். ஆனால் உறுதியாக உதயநிதியை துணை முதலமைச்சராக அவரே ஆக்குவார். எங்களை பொறுத்தவரை ஸ்டாலினின் இந்த மறுப்பு பொய், சங்கடத்தை தவிர்க்கும் தற்காலிக அறிவிப்புதான். தி.மு.க இப்படி ஒரு பேச்சை உருவாக்கி, என்ன எதிர்வினை வருகிறதென பார்த்திருக்கிறது, எப்போதும்போல மறுப்பு தெரிவித்து, பின்பு வழக்கம்போல் மறுத்ததை அறிவிப்பாக தருவார்கள். இதுவெறும் ட்ரெய்லர்தான், செட்டிங்தான். உதயநிதியை துணை முதலமைச்சராக்க மக்களை இப்போதே தயார் படுத்துகிறார்கள்” என்றார் சல்மா
இதுவெறும் வதந்தியே எனப் பேசத் தொடங்கிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சல்மா, ``இவ்விவகாரத்தை தமிழ்நாடு முதலமைச்சரே தெளிவுபடுத்திவிட்டார். தி.மு.க மக்கள் நலன் சார்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து கொண்டிருக்கிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தி.மு.க-மீது திட்டமிட்டு வதந்திகளை அவர்களே ஒன்றுகூடி விமர்சனம் செய்வார்கள். பா.ஜ.க கும்பலுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இதுதான் அஜெண்டா. உதயநிதி துணை முதலமைச்சராவதற்கு கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் கிடையாது. உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. அவர் துணை முதலமைச்சராவாரா... எப்போது ஆவர் என்பதையும் தமிழ்நாடு முதலமைச்சரே முடிவெடுப்பார்” என்றார் சுருக்கமாக .
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk``உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா?!"- பொங்கல் வாழ்த்து மடலில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்
http://dlvr.it/T1NhNm
Monday, 15 January 2024
Home »
» `துணை முதல்வராகிறாரா உதயநிதி?' - பரபரத்த தகவல்; மறுத்த முதல்வர்... `வியூகம்' எனச் சாடும் பாஜக