உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். குறிப்பிட்ட மத நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக பா.ஜ.க அரசு நடத்துவதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதைப் புறக்கணித்துவிட்டன.அயோத்தி ராமர் கோயில்
இன்னொருபக்கம், சனாதன தர்மத்தை மீறி ராமர் கோயில் திறக்கப்படுகிறது என சங்கராச்சாரியார்களும் இதனைப் புறக்கணித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ராம ராஜ்ஜியம் என்ற உணர்வு நம் அரசியலமைப்பிலேயே பதியப்பட்டிருப்பதாகவும், அதனை அவமதிப்பவர்கள் அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி கருத்தரங்கின் தொடக்க விழாவில் பேசிய ஜக்தீப் தன்கர், ``வரலாறு தெரியாத, அறியாத ஒருவர், ராமர் ஒரு கற்பனையான உருவம் என்று கூறும்போது மிகவும் வேதனையடைகிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அதில், அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ற பகுதியின் மேல் ராமர், லட்சுமணன், சீதையின் படங்கள் இருக்கின்றன.ஜக்தீப் தன்கர்
ராம ராஜ்ஜியம் என்ற உணர்வு, இந்திய அரசியலமைப்பில் பதியப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அதை மிக உயரத்தில் வைத்திருக்கின்றனர். இங்கு, ராமரை அவமதிப்பவர்கள், அரசியலமைப்பில் மிகவும் சிந்தனையுடனும், விவேகத்துடனும் ராமரின் படங்களை வைத்த, நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களை உண்மையில் அவமதிக்கிறார்கள். அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கும்போதுதான் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும்" என்று கூறினார்.ராமர் கோயில் திறப்பு விழா: பூரி சங்கராச்சாரியார் முதலான ஆன்மிகப் பெரியவர்கள் அதிருப்தி ஏன்?!
http://dlvr.it/T1Mc1V
Sunday, 14 January 2024
Home »
» ``ராம ராஜ்ஜியம் நம் அரசியலமைப்பிலேயே பதியப்பட்டிருக்கிறது; அதனை அவமதிப்பவர்கள்..! - துணை ஜனாதிபதி