பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷரஃப் அறிவித்தாா். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவா் நிறுத்திவைத்தாா்.இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூா் உயா் நீதிமன்றம் 2022-ல் தீா்ப்பளித்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு, 2020-ல் லாகூா் உயா் நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது. அதையடுத்து, முஷரஃபுக்கு எதிரான மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்போது உறுதிசெய்துள்ளது.
"நான் நேசிக்கும் என் தாய்மண்ணுக்குச் சில வாரங்களில் திரும்பிவந்துவிடுவேன்" - 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காக துபாய்க்கு விமானம் ஏறியபோது பர்வேஸ் முஷரஃப் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக தனது 79-வது வயதில், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி மரணமடைந்து சடலமாகத்தான் நாடு திரும்பினார்.
பர்வேஸ் முஷரஃப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்ட நிலையில், தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருப்பது, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.பர்வேஸ் முஷரஃப் காலத்தில் இந்தியா-பாகிஸ்தான்; உறவும், பிரச்னைகளும் எப்படி இருந்தன? - ஓர் அலசல்
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் முஷரஃப் வழக்கில் பிறப்பித்திருக்கும் இந்தத் தீர்ப்பு அந்த நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவிலும் இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகள் குறித்த விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஒருவரின் மரணம், அவர் செய்த குற்றங்களிலிருந்து அவருக்கு `விடுதலை'யைத் தந்துவிடுவதுதான் இங்கே (இந்தியாவில்) சட்ட நடைமுறையாக இருக்கிறது. ஆனால், குற்றம் குற்றம்தானே... ஒருவர் இறந்துவிட்டார் என்பதால், அவர் குற்றவாளி இல்லை என ஆகிவிடாது.விகடன் தலையங்கம்``முஷரஃப் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு, விவாதத்துக்கு இடமின்றி சட்டரீதியாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. பல தரப்பிலும் வரவேற்பையும், இத்தகைய தீர்ப்பின் அவசியம் குறித்த உரையாடல்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஒரு சட்டப் பாடமே!" -
முஷரஃப் வழக்கில் அவர் மரணித்த பிறகு, அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பான தீர்ப்பு குறித்து விகடன் ப்ளஸில் வெளியாகியிருக்கும் தலையங்கத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்------>>> மரணத்துக்குப் பின் மரண தண்டனை; இந்தத் தீர்ப்பை ஏன் வரவேற்க வேண்டும்?!மரணத்துக்குப் பின் மரண தண்டனை; இந்தத் தீர்ப்பை ஏன் வரவேற்க வேண்டும்?!
http://dlvr.it/T1PcPH
Monday 15 January 2024
Home »
» Pervez Musharraf: `இறந்த பிறகும் மரண தண்டனை...' - முஷரஃப் வழக்கு சொல்லும் செய்தி என்ன?