ஆந்திர அரசியல் பல புதிய காட்சிகளைக் காணத் தொடங்கிவிட்டது. அங்கு, இன்னும் நான்கு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, இரண்டாவது முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.ஜெகன்மோகன் ரெட்டி
ஒரு காலத்தில், பெரும் செல்வாக்குடன் ஆளுங்கட்சியாக வலம்வந்த காங்கிரஸ் கட்சி, இழந்த செல்வாக்கை மீட்டு, மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரத்துடிக்கிறது. அதற்கான ஒரு உத்தியாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.ஷர்மிளாவை, ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கட்சித் தலைமை நியமித்திருக்கிறது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடன்பிறந்த தங்கைதான் ஒய்.எஸ்.ஷர்மிளா என்பதுதான் களத்தின் சுவாரஸ்யமே. ஒன்றுபட்ட ஆந்திராவில் செல்வாக்குமிக்க காங்கிரஸ் கட்சித் தலைவராக விளங்கிய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் முதல்வராக இருந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவியை எதிர்பார்த்தார் ஜெகன். குறிப்பாக, முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் பலமுறை கோரிக்கை வைத்தார். ஒய்.எஸ்.ஷர்மிளா - காங்கிரஸ்
ஆனால், ரோசய்யா, கிரண் ரெட்டி போன்ற மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் நாற்காலியில் அமரவைத்த காங்கிரஸ் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டிக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, நடைப்பயணம் எல்லாம் அவர் சென்றார்.
அப்போது, அண்ணனுக்கு துணை நின்றவர்தான் ஒய்.எஸ்.ஷர்மிளா. தாய் விஜயம்மாவுடன் சேர்ந்து ஜெகனுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார் ஷர்மிளா. அதன் மூலமாக, மாநில அளவில் தலைப்புச்செய்தியாகவும் அவர் மாறினார்.கே.சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் பக்கம் சாய்ந்தார்கள். அதனால், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்தது. 2019-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் நாற்காலியை ஜெகன் பிடித்தார். ஜெகனுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக, தெலங்கானா அரசியலுக்குப் போனார் ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற புதிய கட்சியைத் தொடங்கி, பி.ஆர்.தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்துவந்தார் ஷர்மிளா.
கே.சி.ஆரை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிடவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்து, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார். தற்போது மாநிலத் தலைவர் பதவியையும் காங்கிரஸ் கட்சி அவருக்கு வழங்கியிருக்கிறது. ஷர்மிளா
இதனால், தனது அண்ணனுடன் நேரடியாக அரசியல் களத்தில் மோதும் இடத்துக்கு ஷர்மிளா வந்திருக்கிறார். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட நடந்துவரும் முயற்சியில், ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்புவார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.``வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும்” - சசி தரூர் சொல்வதென்ன?
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு
இதற்கிடையில், தெலங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால், ஜெகனுக்கும் பாபுவுக்குமான மோதலைவிட, ஜெகனுக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே நடக்கவிருக்கும் மோதலைத்தான் ஆந்திரா அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். தெலங்கானாவில் செய்தது போன் இங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாரா, அண்ணனுக்கு எதிராக தங்கையின் ஆக்ஷன் பிளான் எப்படி இருக்கும், அதற்கு அண்ணனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T1VYGS
Wednesday, 17 January 2024
Home »
» அண்ணன் ஜெகன் Vs தங்கை ஷர்மிளா... எப்படி இருக்கிறது ஆந்திர அரசியல் ஜல்லிக்கட்டு?!