கார்ப்பரேட் நிறுவனங்கள், தனிநபர் எனப் பலரும் அரசியல் கட்சிகளுக்கு எளிதாக நிதியளிப்பதற்காக 2018-ல் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கும் வகையிலும், இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் குடிமக்கள் தகவல் பெற முடியாத வகையிலும் இந்தத் திட்டத்தை பா.ஜ.க அரசு வகுத்திருந்தது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் இறுதியில்,``தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் சட்டத்துக்கு முரணானது. தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (a)-க்கு எதிரானது. எனவே இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது" எனத் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பா.ஜ.க தேசிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,`` தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை பா.ஜ.க மதிக்கிறது. ஆனால், இந்தத் திட்டம் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான தீர்ப்பு நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கின்றன.ரவிசங்கர் பிரசாத், அமித் ஷா
எனவே, இதுதொடர்பான விளக்கமளிக்கும் முன்பு விரிவான ஆய்வு தேவைப்படும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேர்தல் நிதியைச் சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகமும் அதன் ஒரு பகுதிதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆளும் பா.ஜ.க அரசுக்கு லஞ்சம் வழங்க இந்த தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஊழல் மற்றும் லஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தக்கூடாது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYதேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,500 கோடி... பாதிக்கும்மேல் பாஜக; எந்த கட்சிக்கு எவ்வளவு? முழு விவரம்
http://dlvr.it/T2pw9r
Friday, 16 February 2024
Home »
» தேர்தல் பத்திரம்:``உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால்..." - என்ன சொல்கிறது பாஜக?!