எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டால்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க என்ற முடிவுக்கு வந்த எதிர்க்கட்சிகள், ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. 400 தொகுதிகளில் பொதுவேட்பாளர்களை நிறுத்தினால், பா.ஜ.க-வைத் தோற்கடித்துவிடலாம் என்று ‘இந்தியா’ கூட்டணியின் ஆரம்ப கூட்டங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இந்தியா கூட்டணி தலைவர்கள்
ஆனால், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளால், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடுகூட செய்துகொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, எப்படியாவது தங்கள் கட்சி ஜெயித்தால் போதும் என்ற மனநிலைக்கு ஒவ்வொரு கட்சியும் வந்துவிட்டன.
‘மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் திரிணாமுல் கட்சியே போட்டியிடும்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ‘பஞ்சாப்பில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மியே போட்டியிடும்’ என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் அதிரடியாக அறிவித்தார்கள். அதற்கடுத்து, டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மியே போட்டியிடும் என்று அறிவித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.மம்தா பானர்ஜி
அவர்களைத் தொடர்ந்து, ‘ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி தனித்துப் போட்டியிடும்’ என்று தற்போது அறிவித்திருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா. ‘ஜம்மு காஷ்மீரிலுள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளிலும், லடாக்கிலுள்ள ஒரு மக்களவைத் தொகுதியிலும் தேசிய மாநாடு கட்சி தன் சொந்த செல்வாக்கில் போட்டியிடும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘அவர்கள் கடின முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை’ என்றார் ஃபரூக் அப்துல்லா. மேலும், ‘நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, சட்டமன்றத் தேர்தலும் இங்கு நடத்தப்படும் என்று நினைக்கிறேன். வரும் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி தனித்துப் போட்டியிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்கிறார் அவர்.ஃபரூக் அப்துல்லா
ஆனால், ‘பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது’ என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். ‘ஒவ்வொரு கட்சிக்கும் வரைமுறைகள் உண்டு. தேசிய மாநாடு கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் இந்தியா கூட்டணியின் அங்கங்களாக இருக்கின்றன, தொடர்ந்து இருக்கப்போகின்றன’ என்றும் அவர் கூறுகிறார்.
மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியை காங்கிரஸ் கட்சி ஊதாசீனப்படுத்தியது. அந்தக் கட்சியுடன் மத்தியப்பிரதேசத்தில் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை. இப்போது, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ளப்போவதில்லை என்று மூன்று கட்சிகள் அறிவித்திருக்கின்றன. அகிலேஷ் யாதவ்
‘ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு தனித்தனியாகப் போட்டியிடுவது என்பது இந்தியா கூட்டணியின் தேர்தல் உத்திகளில் ஒன்றா?’ என்று அரசியல் பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால், எதிர்க்கட்சிகளைப் பொறுத்தளவில், எப்படியாவது பா.ஜ.க-வைத் தோற்கடித்தாக வேண்டும்.
ஏனென்றால், அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிட்டிருப்பதால், பல எதிர்க்கட்சிகள் படாதபாடு படுகின்றன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையை வைத்து தூக்கிவிட்டார்கள் என்ற நிலையில், பா.ஜ.க மீதான அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் அதிகரித்திருக்க வேண்டும். ஹேமந்த் சோரன்
இப்போது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டார்கள். நூற்றாண்டைக் கடந்த ஒரு தேசியக் கட்சிக்கே இந்த நிலையென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற அச்சம் மாநிலக் கட்சிகளுக்கு வந்திருக்க வேண்டும். அந்த அச்சம் இருந்தால், எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பெரும்பான்மையான தொகுதிகளில் பொதுவேட்பாளர்களை நிறுத்த முன்வந்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தேர்தல் பத்திரங்கள் மீது பேரார்வம் காட்டிய பாஜக-வுக்கு, தடை உத்தரவு எந்த வகையில் பின்னடைவு?!
மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பகவந்த் மான் போன்றவர்களுக்கு பா.ஜ.க மீது பயம் இல்லையா, அல்லது, தனியாகப் போட்டியிட்டு, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சௌத்ரியும் பா.ஜ.க பக்கம் போய்விட்டனர். அதனால், தற்போது தனித்துப் போட்டியிடப்போவதாக ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கும் நிலையில், அவரும் பா.ஜ.க கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று பா.ஜ.க-வினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.நிதிஷ் குமார்
ஆனால், அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தைப் பறித்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால், தேசிய மாநாடு கட்சி ஜம்மு காஷ்மீர் மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்தக் குழப்பங்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமா என சந்தேகம் எழுப்பிகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி என்ன நிலைபாடு எடுக்கப்போகிறது என்பதை வைத்து தான், இது எத்தகைய பின்னடைவு அல்லது இதுவே தான் வியூகமா என்ற முடிவுக்கு வர முடியும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2sNnt
Saturday, 17 February 2024
Home »
» தனித்தனியாகப் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் - வீழ்ச்சியா... வியூகமா?!