தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பை அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். இதைத் தொடந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தலைமையில் அவிநாசியில் பிப்ரவரி 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று, கடந்த 5-ம் தேதி அறிவித்திருந்தார்.ஆ.ராசா
அதன்படி, அவிநாசியில் பிப்ரவரி 9-ம் தேதியான இன்று திட்டமிட்டப்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி, ஆ.ராசா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, கொங்கு பகுதியில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததைப் பட்டியலிட்டார். இது கண்டன ஆர்ப்பாட்டமா அல்லது தேர்தல் பொதுக்கூட்டமா என்கிற அளவுக்கு இருந்திருக்கிறது. உண்மையில் அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் என்ற கோணத்தில் அ.தி.மு.க சீனியர்களிடம் பேசினோம்.
``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து ஆ.ராசா அவதூறாகப் பேசுவது இது முதன்முறையல்ல. ஆனால் இம்முறை கொஞ்சம் ஓவராகப் பேசிவிட்டதால், தலைமை டென்ஷன் ஆகிவிட்டது. எனவே, ஆ.ராசாவை வைத்து தேர்தல் பரப்புரை செய்ய தலைமை திட்டமிட்டது. ஆனால், தமிழ்நாடு முழுக்க போராட்டம் செய்து, ஆ.ராசாவை பெரிய ஆளாக ஆக்கிவிடக் கூடாது என்று தலைமை உறுதியாக இருந்தது.எல்.முருகன்
நீலகிரி எம்.பி-யான ராசா மீண்டும் அதே தொகுதியில்தான் போட்டியிட இருப்பதால், அங்கு போராட்டம் செய்ய திட்டமிட்டது தலைமை. அதன்படியே நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் அரசியல் கணக்குகளும் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை நீலகிரி தொகுதியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கு போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வேலைப்பார்த்து வருகிறார். அதேபோல, ராசாவும் அங்கு தீவிரமாகப் பணியாற்றுகிறார். ஆனால், பா.ஜ.க-வுக்கு அடிப்படை பணிகள் செய்ய ஆள்களே இல்லை. தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் முபாரக், மாவட்ட அமைச்சர் ராமசந்திரன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு இடையே மும்முனை போட்டி இருக்கிறது. இதனால், இருவருக்குமே தேர்தல் பணியில் சிக்கல் இருக்கிறது. இது நீலகிரி மாவட்ட அரசியல் சூழ்நிலையை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக்கி இருக்கிறது. அதேபோல மலையில்தான் தி.மு.க பா.ஜ.க போட்டி இருக்கிறது. மலைக்கு கீழே கொங்கு அரசியல் தாக்கம் இருப்பதால், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு இருக்கிறது.அவிநாசி ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி
எனவே, அவர்கள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தால், அது அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும். இதை மனதில் வைத்துதான் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதுபோல ராசாவுக்கு எதிராகப் பேசியதோடு, நீலகிரிக்கு அ.தி.மு.க ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதென்று, தேர்தல் பரப்புரையாக எடப்பாடி பட்டியலிட்டுப் பேசியிருக்கிறார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது" என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY`வானதி சீனிவாசன் டு அண்ணாமலை வார் ரூம்...' - கோவை தொகுதிக்கு பாஜக-வில் நடக்கும் மியூஸிக்கல் சேர்!
http://dlvr.it/T2X6Xj
Friday, 9 February 2024
Home »
» `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' - எடப்பாடியும் ஆ.ராசாவுக்கு எதிரான `அவிநாசி' ஆர்ப்பாட்டமும்!