`உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு பாடநூல்கழக தலைவரும், தி.மு.க மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துகொண்டு பேசுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டை பிளவுபடுத்தி உள்ளது. அதனை சரி செய்ய தி.மு.க. இருக்கும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் மாநாடாக இருந்தாலும் சரி பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி முன்னேற்றத்திற்காக தான் இருக்கும். தமிழகத்தில் கோயில்களுக்கு செல்லும் பிரதமர் மக்களை சந்தித்து பேச நேரமில்லை. இந்தியாவை கார்பரேட் கம்பெனிகளுக்கு வியாபாரம் செய்த வியாபாரி இன்று ராமர் கோயிலுக்குப் பின்னால் ஒழிந்துகொண்டு தான் கபடற்றவர் என நிரூபிக்க முயல்கிறார். அவரை தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ராமர் கோயில் முழுதாக கட்டி முடிக்கப்படவில்லை. ராமர் கோயிலை அரைகுறையாக கட்டிமுடிக்கப்பட்டது நல்லதுக்கு அல்ல என சங்கராச்சாரியார்கள் சொல்கிறார்கள். அரைகுறையாக திறந்துவைக்கப்பட்ட ராமர் கோயில் திறப்புவிழாவுக்கு ஏன் ஜனாதிபதியை அழைக்கவில்லை. ராமருக்கு துரோகம் செய்தவர் மோடி.கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
சந்தையில் பெட்ரோ மாக்ஸ் லைட்டை வைத்து லேகியம் விற்கும் வியாபாரியை போன்று செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பதவி பிரமாணம் செய்து வைப்பது, அமைச்சரவையில் ஏதாவது மாறுதல் என முதலமைச்சர் கொடுத்தால் அதில் கையெழுத்துபோடுவது, சட்டசபையில் கூட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றுவது, அந்த உரையை முதலமைச்சர் எழுதிகொடுத்தால் அதை வாசிப்பது, பல்கலைகழங்களில் வேந்தராக இருப்பதால் அந்த விழாக்களில் கலந்துகொள்வது... இதுதான் ஆளுநரின் வேலை. ஆனால், அவர் இதைத்தவிர மற்ற எல்லாவேலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
சனாதனத்தின் வாரிசு திருவள்ளூவர் என்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனச்சொன்ன திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார்கள். மதம் என்ற பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும் எனச் சொன்ன வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்கிறார். காந்தி சுதந்திரத்தை பெற்றுதரவில்லை, சுபாஷ் சந்திரபோஸ்தான் பெற்றுத்தந்தார் என்கிறார். மகாத்மா காந்தி படத்தை எடுத்துவிட்டு ரூபாய் நோட்டில் சவார்க்கர் படத்தை போட்டாலும் போடுவார்கள். பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிககுக்கு எல்லாம் 20,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. கல்விக்கான கடன் கட்டாமல் இருந்தால் பேங்கில் போட்டோ போட்டு கேவலப்படுத்துகிறார்கள். கார்ப்பரேட்டுகளை வளர்த்துவிடும் ஆட்சி நரேந்திர மோடி ஆட்சி.
முருகன் கையில் இருக்கும் வேலை பிடுங்கி ஊர்வலமாக வந்து அதை அரசியலாக்குவது தான் பா.ஜ.க. மதத்தின் பெயரால் அரசியலாக்குவது பா.ஜ.க. ஆனால், அதே முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி மக்கள் வழிபடுவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. இதுவரை 3,500 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்துள்ளோம், 25 கோவில்களில் தங்க தேர் வழங்கப்பட்டுள்ளது. நான்கு கோவில்களில் இந்து அறநிலை சார்பில் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விபூதி பூசாத தர்மகர்த்தா யார் என்றால் அவர் தான் தளபதி மு.க.ஸ்டாலின். இந்துக்களுக்கு எதிரி தி.மு.க என்ற போலி பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்.நாகர்கோவில் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி
2024-ல் பா.ஜ.க படுதோல்வி அடைந்து இந்தியா கூட்டணி வெற்றிபெறப்போவது உறுதி. மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் நாடுமுழுவதும் கொண்டுசெல்ல இந்தியா கூட்டணி வெல்லவேண்டும். மதவெறிபிடித்த பா.ஜ.க கூட்டணி விரட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2sZL1
Saturday, 17 February 2024
Home »
» 'விபூதி பூசாத தர்மகர்த்தா யார் என்றால், அவர்தான் ஸ்டாலின்..!' - திண்டுக்கல் ஐ.லியோனி