‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைப் பிடிக்கும். பா.ஜ.க 370 இடங்களைப் பிடிக்கும்’ என்று உற்சாகத்துடன் முழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. ‘இந்தியா’ கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளமும் தங்கள் பக்கம் வந்துவிட்டதால், பா.ஜ.க பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.மோடி - நிதிஷ் குமார்
மேலும், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பா.ஜ.க-வுக்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்துவது என்ற ஆலோசனை, நடைமுறை சாத்தியமில்லாமல் போய்விட்டது. இதுவும் பா.ஜ.க-வுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் வெற்றி எளிதாகிவிட்டதாக பா.ஜ.க-வினர் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று (பிப். 15) வழங்கிய தீர்ப்பு பா.ஜ.க-வுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகக் கொண்டுவருகிறோம் என்று சொல்லி, ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு 2018-ம் ஆண்டு கொண்டுவந்தது. உச்ச நீதிமன்றம்
ஆனால், இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. காரணம், எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது என்பது மட்டுமே வெளிப்படையாகத் தெரியும். ஆனால், அந்த நிதியைக் கொடுத்தது யார் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதுதான் பிரச்னை. எனவே, இந்தத் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வேறு சில தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
‘தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது’ என்று சொல்லி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது’ என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும், ‘தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிக்கு யார் யார் எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார்கள் என்ற விவரங்களை எஸ்.பி.ஐ வங்கியும், தேர்தல் ஆணையமும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. தலைமை நீதிபதி சந்திரசூட்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட நிதியில், பா.ஜ.க-வுக்குத்தான் மிக அதிகமான நிதி கிடைத்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான், இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கட்சியாக பா.ஜ.க உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருப்பதுதான், பா.ஜ.க-வுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் பெரும் பகுதிக்கு பா.ஜ.க-வுக்குத்தான் போயிருக்கிறது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமே தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்கிறது. எந்தக் கட்சிக்கு யார் யார் எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் எஸ்.பி.ஐ வங்கியிடம் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், அந்த விவரங்களை எஸ்.பி.ஐ வெளிப்படுத்த வேண்டும். அப்போது, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் யார் யார் என்ற விவரம் வெளிப்படும்.அதானி - மோடி
‘பெரும் கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகைகளையும், கடன் தள்ளுபடிகளையும் பல்லாயிரம் கோடிகளில் வாரி வழங்கியவதற்கு பிரதிபலனாக, பா.ஜ.க-வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக பல்லாயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ’ஹிண்டன்பர்க் அறிக்கை’யைத் தொடர்ந்து, தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் பிரதமர் மோடிக்குமான தொடர்பு குறித்து பெரும் சர்ச்சை எல்லாம் எழுந்தது. அது குறித்து நாடாளுமன்றத்திலேயே எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. `ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு..!’ - தமிழக அரசின் வாதமும் விளக்கமும்!
அந்தக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க-வினர் அடியோடு மறுத்தனர். ஆனால், தேர்தல் பத்திரங்கள் நிதி தொடர்பான விவரங்கள் வெளியாகும் பட்சத்தில், அதில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் அதிகபட்சமாக நன்கொடை அளித்திருப்பது தெரிய வந்தால், எதிர்க்கட்சிகளின் வாதத்துக்கு அவை வலுசேர்ப்பதாகி விடும். ‘கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இல்லை. பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பா.ஜ.க அரசு, தற்போது மௌனம் காக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சிகள் - மோடி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இப்படியொரு தீர்ப்பு வந்தது, பா.ஜ.க-வுக்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ‘பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பா.ஜ.க அரசு ரகசியமாக உறவு வைத்திருக்கிறது’ என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் உண்மை என்று ஆதாரங்களுடன் நிரூபணமானால், ‘நாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள்; லஞ்சத்துக்கு எதிரானவர்கள்’ என்று பா.ஜ.க-வினரின் பெருமைப் பேச்சு இனி எடுபடாமல் போய்விடும் ஆபத்து உள்ளது!
அதே நேர்த்தில் பாஜக-வினரோ, ``இதில் பாஜக-வுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. அனைத்து கட்சிகளுக்கும் நிதி என்பது வங்கி வழியாக சென்றிருக்கிறது. நிறுவனங்கள், பொதுமக்களுக்கு எந்த கட்சி மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு நிதியை வங்கிகள் மூலம் தருகிறார்கள். இதில் பாஜகவுக்கு மட்டும் பின்னடைவு என்று சொல்வதை ஏற்க முடியாது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T2rDQT
Friday, 16 February 2024
Home »
» தேர்தல் பத்திரங்கள் மீது பேரார்வம் காட்டிய பாஜக-வுக்கு, தடை உத்தரவு எந்த வகையில் பின்னடைவு?!