பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது இன்று, பீகார் சட்டமன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், தற்போது எதிர்க்கட்சி (ஆர்.ஜே.டி) தலைவருமான தேஜஸ்வி யாதவ், ``இந்த புதிய அரசுக்கு எதிராக நிற்கிறேன். 9 முறை பதவியேற்று சரித்திரம் படைத்ததற்காக முதல்வர் நிதிஷ் குமாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.நிதிஷ் குமார் - மோடி
முதல்வர் நிதீஷ் குமாரை நாங்கள் எப்போதும் மதிப்போம்... உங்களை எங்கள் குடும்ப உறுப்பினராக நினைக்கிறோம். நாம் சமாஜ்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்... இதுவரை நாட்டில் மோடியை எதிர்த்து நீங்கள் ஏந்திய கொடியை, இனி உங்கள் மருமகனான நான் தாங்கி பீகாரில் மோடியை எதிர்த்து நின்று பணியை முடிப்பேன். ஆனால், ஜே.டி.யு கட்சியின் எம்.எல்.ஏ-க்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
'நிதிஷ் குமார் ஏன் 3 முறை பதவியேற்றார்? சில தினங்களுக்கு முன்புவரை பா.ஜ.க-வை விமர்சித்தீர்கள், இப்போது அவர்களைப் பாராட்டுகிறீர்கள்... ஏன்? நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்' என ஜே.டி.யு கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கேட்டால்... காரணம் அவர்கள்தான் மக்களிடம் சென்று பதில் சொல்ல வேண்டியவர்கள். பலமுறை முதல்வராகப் பதவியேற்ற ஒருவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு முறை தேர்தலைச் சந்தித்து ஒரே பதவியில் மூன்று முறை பதவியேற்றதை இதற்கு முன்பு நாங்கள் பார்த்திராத ஒன்று.தேஜஸ்வி யாதவ்
ஜே.டி.யு, ஆர்.ஜே.டி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகாகத்பந்தனை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என எனக்குத் தெரியவில்லை. ஆனால், பீகார் மக்கள் அவர் ஏன் கட்சி மாறினார் என அறிய விரும்புகிறார்கள். பீகாரில் எந்த குழந்தையிடமாவது சென்றும் நிதீஷ் ஜியை நம்புகிறாயா எனக் கேளுங்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கூட என்னால் இங்குச் சொல்ல முடியாது. 2013-ம் ஆண்டு முதல் ஐந்து முறை கூட்டணியை மாற்றிக் கொண்டு முழுவதுமாக முதலமைச்சராக இருக்கிறார்.
இனியும் நிதிஷ் குமார் கட்சி மாறமாட்டார் என்பதற்கு பிரதமர் மோடி உத்தரவாதம் தருவாரா... எங்களுக்குச் சோர்வானவர்கள் தேவையில்லை. ராமனைக் காட்டிற்கு அனுப்ப தசரத மன்னனுக்கு விருப்பமில்லை. ஆனால் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைக் கைகேயி செய்துமுடித்தாள். அதுபோலத்தான் நிதிஷ் குமாருக்கும் ஏற்பட்டிருக்கும். இனியாவது முதலமைச்சராக இருந்து, கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டார்.நிதிஷ் குமார்
அதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் NDA கூட்டணிக்கு ஆதரவாக 129 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். அதனால், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஅயோத்தி விவகாரம்: "போலி இந்துத்துவா குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்!” - பீகார் கல்வியமைச்சர்
http://dlvr.it/T2g8rc
Tuesday, 13 February 2024
Home »
» ``இதுவரை நீங்கள் ஏந்திய மோடி எதிர்ப்பு கொடியை, இனி உங்கள் மருமகன் ஏந்துவான்!" - நிதிஷை சாடிய தேஜஸ்வி